மீண்டும் வருகின்றது பப்ஜி! இந்தியாவிற்கு 720 கோடி முதலீடு செய்யும் பப்ஜி நிறுவனம்!

12 November 2020 தொழில்நுட்பம்
pubg.jpg

இந்தியாவில் தடை செய்யப்பட்டு உள்ள பப்ஜி விளையாட்டானது, விரைவில் வெளியாகும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையில், லடாக் பகுதியில் எல்லைப் பிரச்சனை ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, பப்ஜி, யூசி ப்ரௌசர் உள்ளிட்டப் பல செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதிதத்து. பயனர்களின் தகவல்கள் திருடு போக வாய்ப்பு இருப்பதாகவும், அதனைக் கருத்தில் கொண்டு இந்தத் தடை விதிக்கப்படுவதாகவும், மத்திய அரசு அறிவித்தது. இதனையொட்டி, பப்ஜி உள்ளிட்ட செயலிகளை இந்தியாவில் தரவிறக்கம் செய்யவோ அல்லது பயன்படுத்தவோ முடியாது.

இந்த சூழ்நிலையில், இந்திய பயனர்கள் இல்லாததால் பப்ஜி, டிக்டாக் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டது. மேலும், இந்தியாவினைத் தொடர்ந்து பல நாடுகளும் இந்த செயலிகளுக்குத் தடை விதிக்க ஆரம்பித்தன. இதனை ஒட்டி, பப்ஜி நிறுவனமும் அதன் தாய் நிறுவனமுமான க்ரேப்டான் நிறுவனமும், இந்தியாவில் முதலீடு செய்ய உள்ளன.

சுமார் 720 கோடி ரூபாய் அளவிற்கு பெரிய அளவில் பாதுகாப்பான சர்வர்கள், இணைய வசதிகளுடன், மேம்படுத்தப்பட்ட பப்ஜி ஆப்பினை உருவாக்கத் திட்டமிட்டு உள்ளது. இந்த ஆப்பானது, விரைவில் புத்தாண்டு அன்று முதல் செயலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்திய அரசு பாதுகாப்பினை குறையாகக் கூறியுள்ளதால், பாதுகாப்பு விவகாரத்தில் அதிக அக்கறைச் செலுத்தியுள்ளது.

இதனை முன்னிட்டு, புதிய சர்வர்கள் வைக்கப்பட்டதும், மத்திய அரசிடம் இதனை அனுமதிக்கக் கோரி விண்ணப்பிக்க உள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆப்பிற்கு அரசு அனுமதி அளித்தால், கட்டாயம் பப்ஜி ஆப் பயன்பாட்டிற்கு வரும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

HOT NEWS