சில வாரங்களில் தடுப்பூசி தயார்! அனைத்து கட்சி கூட்டத்தில் பிரதமர் மோடி அறிவிப்பு!

05 December 2020 அரசியல்
modicii.jpg

இன்னும் சில வாரங்களில் இந்தியாவில் கொரோனா வைரஸிற்கு எதிரான தடுப்பூசி தயாராகிவிடும் என, பாரதப் பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.

நேற்று காணொலி வாயிலாக அனைத்துக் கட்சிக் கூட்டமானது நடைபெற்றது. அதில், இந்தியாவின் முக்கியக் கட்சிகளின் சார்பில், எம்பிக்கள் கலந்து கொண்டர். அதில், திமுக எம்பியினர் கூறுகையில், கொரோனா வைரஸ் தடுப்பூசியினை அனைவருக்கும் இலவசமாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த சூழலில் அனைவருடையக் கருத்துக்களையும் பிரதமர் மோடிக் கேட்டுக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து அவர் கூறுகையில், இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வருகின்ற கொரோனா தடுப்பூசியானது இன்னும் சில வாரங்களில் தயாராகிவிடும். அதனை நாம், நம்முடைய மக்களுக்கு வழங்குவோம். இதில் முதல்நிலைக் களப்பணியாளர்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கி, அவர்களுக்கு முதலில் வழங்குவோம். தொடர்ந்து மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம்.

மருத்துவ வல்லுநர்கள் அனுமதி வழங்கியவுடன், இந்தியாவில் கொரோனா தடுப்பூசி விநியோகிக்கப்படும். தடுப்பூசியின் மருந்து விலைக் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம். அந்த மருந்தினை மாநில அரசுகளுக்கு பெற்றுத் தருவது, மத்திய அரசின் கடமை. நம் நாடு ஏற்கனவே, தடுப்பூசி விநியோகத்தில் நல்ல அனுபவம் உள்ள நாடாகும் என்றுக் கூறியுள்ளார்.

HOT NEWS