பிலிப்பைன்ஸில் வீசிய வாம்கோ புயல்! கேள்விக்குறியான பொதுமக்களின் வாழ்வாதாரம்!

13 November 2020 அரசியல்
cyclone.jpg

பிலிப்பைன்ஸ் நாட்டில் வீசிய வாம்கோ புயலால், அங்கு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையானது கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டில், தற்பொழுது வாம்கோ புயல் கரையினைக் கடந்துள்ளது. இந்தப் புயலானது 2வது ரக சூப்பர் புயலாக குறிப்பிடப்படுகின்றது. இந்த புயலானது, அந்நாட்டின் மலினா மற்றும் லூசான் தீவு உள்ளிட்டவைகளைக் கடுமையாகத் தாக்கியுள்ளது. இதனால், கடற்கரையினை ஒட்டியுள்ள பகுதிகளில் சுமார் 105 கிலோ மீட்டர் வேகத்தில் கடுமையானப் புயல் காற்றும் வீசியுள்ளது.

இந்த புயலின் காரணமாக, தற்பொழுது அந்நாட்டில் கன மழை பெய்து வருகின்றது. இதனை ஒட்டி, முன்னெச்சரிக்கையாக மின்சாரமானது கட் செய்யப்பட்டது. நாட்டின் பலப் பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இந்த புயலால் பொதுமக்கள் பல இடங்களில், சிக்கியுள்ளனர். அந்நாட்டின் தலைநகரான மனிலா தான், இந்தப் புயலால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு உள்ளன.

இதனைத் தொடர்ந்து, அந்நாட்டு இராணுவம் உள்ளிட்டப் பல பாதுகாப்புப் பிரிவுகள், தற்பொழுது முழுவீச்சில் மீட்புப் ஈடுபட்டு உள்ளனர். இந்த ஆண்டு மட்டும், பிலிப்பைன்ஸ் நாட்டில் சுமார் 21 புயல்கள் உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS