பாகிஸ்தான் இந்து கோயில் இடிப்பு விவகாரம்! 8 போலீசார் சஸ்பெண்ட்!

04 January 2021 அரசியல்
pakistanhindutemple.jpg

பாகிஸ்தான் நாட்டில் இருந்து இந்து கோயிலினை இடித்த விவகாரம் தொடர்பாக, 8 போலீசாரை அந்நாட்டு அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது.

பாகிஸ்தான் நாட்டின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ளது கைபர் பக்துங்வா மாகாணம். அந்த மாகாணத்தில் அமைந்துள்ள கிராமமான தெர்ரி கிராமத்தில் ஒரு பழமையான இந்து கோயில் உள்ளது. அந்தக் கோயிலினைப் புதுப்பிக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் அப்பகுதி அலுவலருக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால், அந்தக் கோயிலானது இரவோடு இரவாக யாருக்கும் தெரியாத விதத்தில் தீயிட்டு எரிக்கப்பட்டது. இது பாகிஸ்தானில் புயலை கிளப்பியது.

அந்நாட்டில் வாழ்ந்து வருகின்ற சிறுபான்மையின மக்களும், மனித உரிமைகள் ஆணையமும் இதற்கு கடும் எதிர்ப்பினை தெரிவித்தன. இந்திய அரசும், பாகிஸ்தானிய அரசும் இதற்கு கண்டனம் தெரிவித்தன. இதனைத் தொடர்ந்து, அம்மாகாணத்தினைச் சேர்ந்த எட்டு போலீஸ் அதிகாரிகளை அம்மாகாண அரசு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டு உள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக 350 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. அதில், 100 பேர் தற்பொழுது கைது செய்யப்பட்டு உள்ளனர். விரைவில், மற்றவர்களும் கைது செய்யப்படுவார்கள் என, போலீசார் தெரிவித்து உள்ளனர். இச்சம்பவம், அந்நாட்டில் வாழ்ந்து வருகின்ற இந்துக்களிடம் அதிருப்தியினை ஏற்படுத்தி உள்ளது.

HOT NEWS