மீண்டும் வருகின்றது நோக்கியா 5310! 30 நாட்கள் பேட்டரி லைப்!

10 June 2020 தொழில்நுட்பம்
nokia5310.jpg

நோக்கியா என்றாலே அனைவருக்கும் ஞாபகத்திற்கு வருவது, அதன் பேட்டரி தான். கடந்த பத்து வருடங்களுக்கு முன்னர், இந்தியாவின் செல்போன் உலகின் ராஜாவாக இருந்த நிறுவனம் என்றால், அது நோக்கியா தான்.

அதன் மார்க்கெட்டானது, இந்தியா முழுவதும் நிறைந்து இருந்தது. இதன் மிகப் பெரிய வலிமையாக இருந்தது அதன் பேட்டரி லைப்பும், அதன் வலிமையானக் கட்டமைப்புமே. அந்த போனை, கீழே போட்டால் உடையாது, சிதறாது மற்றும் எவித பாதிப்பும் ஏற்படாது. இதுவ, மக்கள் மத்தியில் இதன் மதிப்பினை உயர்த்திய மிகப் பெரிய காரணமாக இருந்தது.

திடீரென்று செல்போன் உலகில் ஏற்பட்ட மாற்றம், ஆண்ட்ராய்டு வளர்ச்சி காரணமாக நோக்கியா பின்னுக்குச் சென்றது. அதுமட்டுமின்றி, அந்த நிறுவனத்தால் ஆண்ட்ராய்டு தளத்தினைப் பயன்படுத்த இயலாத காரணத்தால், நோக்கியா நிறுவனம் கிட்டத்தட்ட தோல்வியினைத் தழுவியது. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, ஆண்ட்ராய்டு இயங்குதளத்துடன் வெளி வந்தாலும், சீன போன்களின் மார்க்கெட் எழுச்சி, விலை மற்றும் வசதிகளை நோக்கியாவினால் தர இயலவில்லை.

இந்நிலையில், தற்பொழுது மீண்டும் தன்னுடைய பழைய ஸ்டைல் மொபைலினை புதிய பொலிவுடன் உருவாக்க நோக்கியா முடிவு செய்துள்ளது. அதன்படி, புதிய நோக்கியா 5310 என்ற மொபைலை தயாரித்துள்ளது. இது, MP3 ப்ளேயர், FM 1200 எம்ஏஹெச் பேட்டரி என புதிதாக அப்டேட் செய்யப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி, இதில் விஜிஏ கேமிராவும் உள்ளது.

இந்த புதிய வகை நோக்கியா மொபைலானது, 30 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வசதி உள்ளது. தொடர்ந்து, இதில் டச் டிஸ்ப்ளே உட்பட பல வசதிகள் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளன. இது விரைவில், சந்தைக்கு விற்பனைக்கு வர உள்ளது. இந்த போன், நோக்கியா விரும்பிகளுக்கும், ஸமார்ட்போன்களைப் பயன்படுத்தத் தெரியாதவர்களுக்கும் நல்ல விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

HOT NEWS