இனி போலீஸிற்கு நோ பால்! பால் முகவர்கள் சங்கம் அதிரடி அறிவிப்பு!

26 June 2020 அரசியல்
milk.jpg

இனி காவல்துறையினரின் வீடுகளுக்கு பால் விநியோகம் செய்ய மாட்டோம் என, தமிழ்நாடு பால்முகவர்கள் சங்கம் அதிரடியாக அறிவித்துள்ளது.

தமிழகம் முழுக்க இன்று ஒரு நாள் கடையடைப்பினை, தமிழக வியாபாரிகள் சங்கம் செய்தது. தூத்துக்குடியில் போலீசாரால் தாக்கப்பட்டு, மரணம் அடைந்த ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ் ஆதரவாக இந்த கடையடைப்பில் வியாபாரிகள் ஈடுபட்டனர். இந்த சூழ்நிலையில், பால் முகவர்களையும், பால் வியாபாரிகளையும் போலீசார் தொடர்ந்து தாக்குவதாக பால் முகவர்கள் சங்கம் கூறியுள்ளது.

ஊரடங்கு காலத்தில், அத்தியாவசியப் பொருட்களான பாலுக்கு தடை கிடையாது என, தமிழக அரசு கிடையாது என கூறியுள்ளது. இருப்பினும், போலீசார் தங்களைத் தாக்குவதாகவும், எனவே இனி காவல்துறையினரின் வீடுகளுக்குப் பால் விநியோகம் கிடையாது என, பால்முகவர்கள் சங்கம் அறிவித்துள்ளது. மேலும், எங்களுடையப் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை, கடைநிலை காவலர் முதல், உயரதிகாரிகள் வரை யாருடைய வீட்டிற்கும் பால் விநியோகம் கிடையாது என்றுக் கூறியுள்ளது.

HOT NEWS