உலக கோப்பை போட்டியில் சூதாட்டம் இல்லை! வழக்கு முடித்து வைப்பு!

04 July 2020 விளையாட்டு
srilanka-vs-afghanistan.jpg

2011ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில், சூதாட்டம் நடைபெறவில்லை என, அந்நாட்டு காவல்துறை கூறியுள்ளது.

கடந்த 2011ம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கை அணிகள், உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் மோதின. இதில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இது குறித்து, தற்பொழுது பேசியுள்ள முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் மகிந்தானந்தா அலுத்காமகே, மேட்ச் பிக்சிங் காரணமாக, இலங்கை அணி தோல்வி அடைந்தது எனவும், இல்லையென்றால் கட்டாயம் நமக்கே கோப்பைக் கிடைத்திருக்கும் எனவும் கூறினார்.

இது கிரிக்கெட் உலகில் புதிய சர்ச்சையை கிளப்பியது. இது குறித்து, விசாரிக்க உள்ளதாக, இலங்கை கிரிக்கெட் வாரியம் அதிரடி அறிவிப்பினை வெளியிட்டது. இந்த சூழ்நிலையில், அப்பொழுது கேப்டனாக இருந்த சங்ககரா உட்படப் பல வீரர்களிடம் கிரிக்கெட் வாரியம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியது. இந்த விசாரணையானது, கிரிக்கெட் வாரியத்தின் பார்வையில், புலனாய்வுத் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில் எவ்வித ஆதாரமும், மேட்ச் பிக்சிங் சம்பந்தமாக கிடைக்கவில்லை எனவும், இது ஒரு முகாந்தரமற்ற புகார் எனவும் புலனாய்வுத் துறை விளக்கமளித்துள்ளது. அணியினைத் தேர்வு செய்தது, வீரர்களின் மாற்றம் உள்ளிட்ட விஷயங்கள் பற்றித் தெளிவாக விசாரித்துவிட்டோம். எவ்வித ஆதாரமும் இல்லாததால், இந்த விசாரணையை இத்துடன் முடிக்கின்றோம் என்றுக் கூறியுள்ளது.

இதனால், இலங்கை கிரிக்கெட் வீரர்கள் பெருமூச்சு விட்டுள்ளனர். இதுபற்றி தற்பொழுது அறிக்கை வெளியிட்டுள்ள ஐசிசி, 2011ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியானது, மிக நேர்மையான முறையில் நடைபெற்றதாகவும், அதில் எவ்வி மேட்ச் பிக்சிங்கும் நடைபெறவில்லை எனவும் கூறியுள்ளது.

HOT NEWS