அகற்றப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபி! புதிய தூபிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது!

12 January 2021 அரசியல்
yaluniversity.jpg

இலங்கை யாழ்பாணம் பல்கலைக் கழகத்தில் அகற்றப்பட்ட நினைவு தூபிக்கு பதிலாக, புதிய நினைவு தூபிக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

இலங்கையில் கடந்த வாரம் யாழ்பாணம் பல்கலைக் கழகத்தில் வைக்கப்பட்டு இருந்த தமிழ் ஈழ மக்களின் முள்ளி வாய்க்கால் நினைவுத் தூபியானது, யாரும் எதிர்பாராத வகையில் இடித்துத் தள்ளப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் முதல், பொதுமக்கள் வரைப் பலரும் தங்களுடையக் கண்டனக் குரலை எழுப்பினர். யாழ் பல்கலைக் கழகத்திற்கு முன்னாள், அப்பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

நாம் தமிழர் கட்சியின் சீமான் உள்ளிட்டோர் இந்த செயலுக்குக் கண்டனம் தெரிவித்து, போராட்டம் நடத்தப்படும் எனவும் எச்சரித்தனர். இந்த சூழலில், பல்கலைக்கழக மாணவர்கள் அப்பல்கலைக் கழகத் துணைவேந்தர் சற்குணராஜாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்பொழுது விரைவில் புதிய நினைவுத்தூபியானது வைக்கப்படும் எனவும், மாணவர்கள் அமைதி காக்க வேண்டும் எனவும் கூறினார்.

இந்த சூழலில், புதிய நினைவுத்தூபிக்கு அடிக்கல் நாட்டப்பட்டு உள்ளது. விரைவில் புதிய நினைவுத்தூபியானது அங்கு அமைக்கப்பட உள்ளது என, அப்பல்கலைக்கழகம் தெரிவித்து உள்ளது. இதனைப் பலரும் வரவேற்று உள்ளார்கள் என்றாலும், இது இனிமேலும் நடைபெறக் கூடாது என்றும் வருத்தம் தெரிவித்து உள்ளனர்.

HOT NEWS