ஜப்பானில் புதிய கொரோனா வைரஸ்! நான்காவது வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது!

12 January 2021 அரசியல்
newcoronastrain.jpg

இங்கிலாந்து, ஆப்பிரிக்காவினைத் தொடர்ந்து, ஜப்பானிலும் புதிய மாறுபட்ட கொரோனா வைரஸானது கண்டறியப்பட்டு உள்ளது.

உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸிற்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு தற்பொழுது வழங்கப்பட்டு வருகின்றன. இந்த சூழலில், இங்கிலாந்து நாட்டில் மாறுபட்ட கொரோனா வைரஸானது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸிற்கு எவ்வித அறிகுறியும் கிடையாது. ஆனால், கோவிட்-19 வைரஸினை விட அதிவேகமாகப் பரவும் தன்மைக் கொண்டது. இதனால், அந்த நாட்டில் கடுமையான ஊரடங்கானது பிறப்பிக்கப்பட்டது.

இந்த சூழலில், இதே போன்ற மற்றொரு மாறுபட்ட கொரோனா வைரஸானது ஆப்பிரிக்காவிலும் கண்டறியப்பட்டது. இது உலக சுகாதார மையத்திற்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. ஏற்கனவே பரவி வருகின்ற கொரோனா வைரஸிற்கே, எந்த மருந்து சரியான முடிவினை வழங்கும் என யாருக்கும் தெரியாத நிலையில், இவைகளை தடுக்குமா என்ற சந்தேகம் எழுந்தது. இந்த நிலையில், ஜப்பானில் புதிய வகை மாறுபட்டக் கொரோனா வைரஸானது கண்டறியப்பட்டு உள்ளது.

பிரேசில் நாட்டில் இருந்து ஜப்பானிற்கு வந்த 4 பேரிடம், கொரோனா பரிசோதனை செய்தனர். அதில், அறிகுறியே இல்லாத புதிய வகை, மாறுபட்ட கொரோனா தொற்றானது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதனால், அந்த நாட்டில் சுகாத்தாரத்துறையானது உஷார்படுத்தப்பட்டு உள்ளது. இந்த வைரஸிற்கு தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டு உள்ள மருந்துகள், பலனளிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இது போன்ற மாறுபட்ட கொரோனா வைரஸ்கள், இன்னும் எந்தெந்த நாடுகளில் தோன்றியிருக்கின்றன என்றக் கேள்வியும் தற்பொழுது விஞானிகள் மத்தியிலும், அரசுகள் மத்தியுலும் எழுந்துள்ளன.

HOT NEWS