நேதாஜி பிறந்தநாள் தேசிய துணிச்சல் நாள்! மத்திய அரசு அறிவிப்பு!

20 January 2021 அரசியல்
netajisubhashchandrabose.jpg

நேதாஜியின் பிறந்தநாளினை தேசிய துணிச்சல் தினமாக, இனி கொண்டாடப்படும் என மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

வருகின்ற ஜனவரி 23ம் தேதி தேசிய தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின், 125வது பிறந்தநாளானது கொண்டாடப்படுகின்றது. அன்று முதல் இனி ஒவ்வொரு வருடமும் அவருடைய பிறந்தநாளினை தேசிய துணிச்சல் தினமாகக் கொண்டாடப்படும் என, மத்திய அமைச்சர் பிரகலாத் சிங் ஜோஷி தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், வருகின்ற 23ம் தேதி அன்று நேதாஜியின் பிறந்தநாள் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். மேலும், அவர் ஆரம்பித்து வைத்த இராணுவத்தில் பணியாற்றியவர்களையும், அவர்களின் குடும்பத்தாரையும் சந்திக்க உள்ளார்.

அவருடைய 125வது பிறந்தநாளை ஒரு ஆண்டு முழுவதும் கொண்டாடும் வகையில், பிரதமர் மோடி தலைமையில் 85 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவானது அமைக்கப்பட்டு உள்ளது. தேசிய நூலக மைதானத்தில், நேதாஜியின் பெருமைகளை உணர்த்தும் கண்காட்சியும் திறந்து வைக்கப்படுகின்றது என்றுத் தெரிவித்து உள்ளார்.

இனி ஒவ்வொரு ஆண்டும் நேதாஜியின் பிறந்த நாளினை விவசாயிகளின் நாளாக கொண்டாட உள்ளதாக, டெல்லியில் போராடி வருகின்ற விவசாயிகள் அறிவித்ததைத் தொடர்ந்து, மத்திய அரசானது இப்படியொரு முடிவினை அவசர அவசரமாக எடுத்துள்ளது.

HOT NEWS