எதிர்ப்புகளை மீறி நீட் தேர்வு! மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு!

14 September 2020 அரசியல்
neet.jpg

தமிழகத்தில் நேற்று பெரும் எதிர்ப்பினை மீறி, நீட் தேர்வானது நடைபெற்று முடிந்தது.

மருத்துவம் படிப்பதற்கு வைக்கப்படுகின்ற நீட் நுழைவுத் தேர்வானது, நேற்று தமிழகம் முழுக்க நடைபெற்றது. அதில், பல ஆயிரம் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். அவர்களுக்காக 14 மையங்கள் அமைக்கப்பட்டன. இந்தத் தேர்வினை எழுத வரும் மாணவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, அவர்கள் முழுவதுமாக சோதனை செய்யப்பட்டனர்.

தலையில் மாணவிகள் அணிந்திருந்த கிளிப்கள் முதற்கொண்டு அகற்றப்பட்டு, சோதனை செய்யப்பட்டன. பின்னர், அம்மாணவ மாணவிகள் தேர்வு அறைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் வருவதற்காக, ஏற்கனவே, கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டு இருந்தது. அதனைத் தொடர்ந்து, மாணவ, மாணவிகள் சமூக இடைவெளியுடன் அமர்ந்து தேர்வினை எழுதினர்.

ஏற்கனவே, தமிழகம் முழுக்க நீட் தேர்விற்கு எதிராக, பலரும் தங்களுடையக் கருத்துக்களைத் தெரிவித்து வந்த நிலையில், தற்பொழுது கடுமையான எதிர்ப்பினை தமிழக அரசு உட்படப் பலரும் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS