உலகின் செல்வாக்கு மிகுந்த தலைவர் மோடி! அமெரிக்க ஆய்வு மையம் கணிப்பு!

04 January 2021 அரசியல்
modi-win.jpg

உலகிலேயே மிகவும் செல்வாக்கு மிகுந்த நபராக, பாரதப் பிரதமர் மோடி உள்ளார் என, அமெரிக்க ஆய்வு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்து உள்ளது.

உலகளவில் பிரசித்திப் பெற்ற அமெரிக்க ஆய்வு நிறுவனமான மார்னிங் கன்சல்ட், புதிய ஆய்வு ஒன்றினை நடத்தியது. அதில், உலகளவில் பெரிய 13 நாடுகளின் தலைவர்களைப் பற்றியும், அவர்களில் மிகவும் அதிக செல்வாக்கு நிறைந்தத் தலைவர்களைப் பற்றியும் ஆய்வு செய்தது. அதில், ரஷ்யாவின் விளாடிமிர் புடின், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், சீனாவின் ஜி ஜிங் பிங் ஆகியோரைப் பின்னுக்குத் தள்ளி, பாரதப் பிரதமர் மோடி முதலிடம் பிடித்துள்ளார்.

இவரே, உலகின் அதிக செல்வாக்கு உள்ள நபராக இருக்கின்றார் என, அந்த அமைப்பின் ஆய்வுகள் தெரிவித்துள்ளன. இதனை, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா ஆகியோர் தற்பொழுது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

HOT NEWS