விவசாயியாக மாறிய தோனி! அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி! ஜார்கண்ட் அரசு ஒப்புதல்!

02 January 2021 விளையாட்டு
msdhonifarming.jpg

கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள தல தோனி, தற்பொழுது விவசாயம் செய்த பொருட்களை அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய உள்ளார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி அன்று, அனைத்து வித சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறுவதாக மகேந்திர சிங் தோனி அறிவித்தார். இதனால், அவருடைய ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். இந்த சூழலில், அவர் தற்பொழுது முழு நேர விவசாயியாக மாறியுள்ளார். அவர் தன்னுடைய சொந்த ஊரான ராஞ்சியில் 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட பண்ணையில் விவசாயம் செய்துள்ளார்.

ஸ்ட்ராபெர்ரி, தக்காளி, பப்பாளி உள்ளிட்டப் பல்வேறுப் பொருட்களை விவசாயம் செய்துள்ளார். மொத்தம் 10 ஏக்கரில் இதனை விளைவித்து உள்ளார். இவைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடிவு செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து, அவருக்கு உதவுவதற்கு ஜார்கண்ட் அரசு முன் வந்துள்ளது. அதன்படி, அவர் விளைவித்த பொருட்களை ஐக்கிய அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய, ஜார்கண்ட் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, தரமான உரப் பொருட்களை விவசாயிகளுக்கு வழங்கத் திட்டமிட்டு உள்ளார் தோனி. இவர் விளைவித்துள்ளப் பொருட்கள் அனைத்துமே, இயற்கை முறை விவசாயத்தால் ஆனவை எனவும், இயற்கை உரங்களையே அவர் பயன்படுத்தி உள்ளார் எனவும் கூறப்படுகின்றது.

HOT NEWS