2022 வரை தோனி சிஎஸ்கே அணிக்காக விளையாடுவார்! நிர்வாகி தகவல்!

13 August 2020 விளையாட்டு
cskdhoni.jpg

மகேந்திர சிங் தோனி வருகின்ற 2022ம் ஆண்டு வரை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக, சிஎஸ்கே அணியின் முக்கிய நிர்வாகித் தெரிவித்துள்ளார்.

தோனி எப்பொழுது ஓய்வு பெறுவார் எனப் பலரும் பேசி வருகின்றனர். இது குறித்துப் பேசிய சிஎஸ்கே அணியின் முதன்மை நிர்வாகி காசி விஸ்வநாதன், தோனிக்கு தனது பொறுப்பு என்ன? தன்னையும் தன்னுடைய அணியினையும் எவ்வாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதுத் தெளிவாகத் தெரியும். வருகின்ற செப்டம்பர் 19ம் அன்று, ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகள் தொடங்க உள்ளன.

இதற்காக பயிற்சி பெறுவதற்காக, தோனியும் மற்ற வீரர்களும் சென்னை வருகின்றனர். இவர்கள் பற்றிப் பேசுகையில், இந்த ஆண்டு மட்டுமின்றி, அடுத்த ஆண்டும் அவர் சென்னை அணியில் இடம்பிடிப்பார் என நம்புகின்றோம். அனேகமாக 2022ம் ஆண்டு வரை அவர் விளையாடுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. அவர் தொடர்ந்து, தன்னுடைய சொந்த ஊரில், தீவிரமாகப் பயிற்சிப் பெற்று வருகின்றார்.

தோனிக்கு எவ்வாறு அணியினைப் பார்த்துக் கொள்ள இயலும் என்பது, நன்குத் தெரியும். அவர் தலைமையில் நம்முடைய அணியானது, ப்ளே ஆப் வரை, பல முறை சென்றுள்ளது என்றுக் கூறியுள்ளார்.

BREAKING

சக்ரா திரைவிமர்சனம்!
மேற்கு வங்கத் தேர்தல் கணிப்பு! திரிணாமுல் VS பாஜக? யாருக்கு வெற்றி?
விவசாயிகளை தடுக்கு முள் வேலி! காண்க்ரீட் தடுப்புகள்! இரும்பு பேரிகேடுகள்!
சித்ரா தூக்கிட்டு தான் தற்கொலை செய்து கொண்டார்! நிபுணர் குழு அறிக்கை!
லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன்! படு திரில்லராக உருவாக உள்ளதாக படக்குழு அறிவிப்பு!
ரேஸ் காட்சிக்காக வெளிநாடு சென்றுள்ள வலிமை குழு! உற்சாகத்தில் ரசிகர்கள்!

HOT NEWS