தோனி ஒரு புத்திசாலி! அவர் என்னை கண்டித்தார் முகம்மத் ஷமி ஓப்பன் டாக்!

11 May 2020 விளையாட்டு
mohammedshami.jpg

தோனி ஒரு புத்திசாலி எனவும், அவரிடம் இருந்து வீரர்கள் பலவற்றினைக் கற்றுக் கொள்ளலாம் எனவும், மனம் திறந்து கூறியுள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் முகம்மத் ஷமி.

இது குறித்து, தன்னுடைய இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்தில் விளையாடினோம். அந்தப் போட்டியில், நியூசிலாந்து வீரர் மெக்கல்லம் 300க்கும் அதிகமான ரன்களை குவித்து விட்டார். அப்பொழுது, நான் பந்து வீசுவதற்கு சென்றேன்.

அப்பொழுது, பவுன்சர் போடவா என்றுக் கேட்டான். அதற்குத் தோனி வேண்டாம் என்றார். அதனையடுத்து, நான் பந்து வீசினேன். அந்தப் பந்தானது, தோனியின் தலைக்கு மேல் சென்றது. அதனைத் தொடர்ந்து, தோனி என்னிடம் பேசினார். எதற்காக அந்தப் பந்தினை வீசினாய் என்றுக் கேட்டார். கை நழுவி வந்துவிட்டது என நான் கூறினேன்.

அதற்கு என்னைக் கடிந்து கொண்ட தோனி, நான் என்னுடையக் கேரியரில் நிறையே பேரினைப் பார்த்துள்ளேன். அனுபவத்தில் கூட நான் மூத்தவன். என்னை ஏமாற்ற நினைக்காதே என்றுக் கூறினார். அவரிடம் இருந்து, களத்தில் நம்மால் எதையும் மறைக்க இயலாது. நான் என்னுடைய அனைத்து கிரிக்கெட் ஆட்டங்களையும், தோனியின் தலைமையில் தான் ஆரம்பித்தேன். அவர் ஒரு புத்திசாலி. அவரிடம் இருந்து நீங்கள், நிறையவேக் கற்றுக் கொள்ளலாம் என்றுக் கூறியுள்ளார்.

HOT NEWS