புதிய நாடாளுமன்றம்! டிசம்பர் 10ம் தேதி அடிக்கல் நாட்டும் மோடி!

06 December 2020 அரசியல்
newparliament1.jpg

புதிய நாடாளுமன்றத்திற்காக அடிக்கல் நாட்டும் விழாவில், பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார்.

இந்திய அரசாங்கத்திற்காக புதிய நாடாளுமன்ற வளாகமானது, பிரம்மாண்டமாக உருவாக்கப்பட உள்ளது. 64,500 சதுர அடி பரப்பளவில், மிகப் பிரம்மாண்டமாக இந்த வளாகமானது அமைய உள்ளது. 3 கிலோ மீட்டர் நீளமுள்ள ராஜபாதையும் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளது. இந்த இடத்திற்குள்ளேயே, பிரதமர் இல்லமும், துணைக் குடியரசுத் தலைவர் இல்லமும் அமைய உள்ளது. முக்கோண வடிவில் அமைய உள்ள இந்தக் கட்டிட அமைப்பில், 1244 எம்பிக்களுக்கான இருக்கைகளை அமைக்கப்பட உள்ளது.

இதில் தலைமைப் பொதுச் செயலாளர் அலுவலகமும், மற்ற முக்கிய அலுவலகங்களும் அமைய உள்ளன. இந்த கட்டிட அமைப்பினை ஆதித்யா பிர்லா குழுமமானது கட்டும் பொறுப்பினை ஏற்று உள்ளது. இதற்காக 900 கோடி ரூபாய் செலவாகும் என கணிக்கப்பட்டு உள்ளது. இந்தக் கட்டிடமானது, பூகம்பம் முதலானவைகளைத் தாங்கும் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட உள்ளது. இதனைக் கட்டி முடிப்பதற்காக 2,000 பேர் நேரடியாகவும், 9,000 பேர் மறைமுகமாகவும் பணியமர்த்தப்பட உள்ளனர்.

இந்தக் கட்டிட அமைப்பானது, வருகின்ற 2022ம் ஆண்டு இந்தியாவின் 75வது சுதந்திரத் தினத்தன்று திறக்கப்பட உள்ளது. இதற்கானப் பணிகள் அனைத்தும், வருகின்ற டிசம்பர் 10ம் தேதி அன்று ஆரம்பிக்கப்பட உள்ளது. அன்று, பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி, கட்டிடப் பணிகளைத் துவக்கி வைக்கின்றார்.

HOT NEWS