மாடர்னா தயாரித்த கொரோனா மருந்து 95% வெற்றி! நம்பிக்கை அளிக்கும் அமெரிக்கா!

17 November 2020 அரசியல்
coronavirus.jpg

அமெரிக்காவின் மாடர்னா என்ற மருந்து தயாரிக்கும் நிறுவனம் உருவாக்கி உள்ள, கொரோனா வைரஸிற்கு எதிரான மருந்தானது 95% வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

அமெரிக்கா உள்ளிட்டப் பல நாடுகளில், இந்த கொரோனா வைரஸிற்கு எதிராக தடுப்பு மருந்தானது பரிசோதிக்கப்பட்டு வருகின்றது. இதில், அமெரிக்காவில் மட்டும் பல நிறுவனங்கள் இந்த மருந்தினைத் தயாரிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. உலகப் புகழ் பெற்ற மாடர்னா என்ற நிறுவனமானது, கொரோனா வைரஸிற்கு எதிராக தடுப்பு மருந்தினை உருவாக்கி உள்ளது.

இந்த மருந்தின் இரண்டு கட்டப் பரிசோதனைகளிலும் நல்ல முடிவுகள் கிடைத்ததை அடுத்து, மூன்றாவது கட்டப் பரிசோதனையானது நடைபெற்று வருகின்றது. இந்தப் பரிசோதனையில், 30,000க்கும் அதிகமான நபர்கள் பங்குபெற்றனர். இந்த பரிசோதனையில், 95% வெற்றியானது உறுதியாகி உள்ளதாக, அம்மருந்து நிறுவனம் தெரிவித்து உள்ளது. இந்த மருந்தானது, கொரோனாவினை எளிதாகக் கட்டுப்படுத்துகின்றது எனவும் கூறியுள்ளது.

இந்த மருந்தினை மைனஸ் 20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பாதுகாத்தால், 6 மாதங்களுக்குப் பயன்படுத்தலாம் எனவும், 2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் சுமார் 30 நாட்களுக்குப் பயன்படுத்தலாம் எனவும் கூறியுள்ளது.

BREAKING

சக்ரா திரைவிமர்சனம்!
மேற்கு வங்கத் தேர்தல் கணிப்பு! திரிணாமுல் VS பாஜக? யாருக்கு வெற்றி?
விவசாயிகளை தடுக்கு முள் வேலி! காண்க்ரீட் தடுப்புகள்! இரும்பு பேரிகேடுகள்!
சித்ரா தூக்கிட்டு தான் தற்கொலை செய்து கொண்டார்! நிபுணர் குழு அறிக்கை!
லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன்! படு திரில்லராக உருவாக உள்ளதாக படக்குழு அறிவிப்பு!
ரேஸ் காட்சிக்காக வெளிநாடு சென்றுள்ள வலிமை குழு! உற்சாகத்தில் ரசிகர்கள்!

HOT NEWS