பள்ளிகள் கல்லூரிகள் திறப்பது தள்ளி வைப்பு? முக ஸ்டாலின் கடும் தாக்கு!

03 November 2020 அரசியல்
mkstalin1.jpg

பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பு தள்ளி வைக்கப்படுவதாக, செய்திகள் வெளியாகி உள்ளன.

தமிழகத்தில் வருகின்ற நவம்பர் 16ம் தேதி முதல், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என, தமிழக அரசு அறிவித்தது. குறிப்பாக, 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்புப் பயிலும் மாணவ.மாணவியர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறும் எனக் கூறப்பட்டது. இந்த மாதம் தீபாவளி உள்ளிட்டப் பண்டிகைகள் வர உள்ளன. இதனால், பொதுமக்கள் அதிகளவில் வெளியில் நடமாடுவதால், கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், பள்ளியினைத் திறந்தால், கட்டாயம் மாணவர்கள் பாதிக்கப்படுவர் என, பெற்றோர்களும் ஆசிரியர்களும் தொடர்ந்து கோரிக்கை வைத்த வண்ணம் இருந்தனர். அதனைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு தற்பொழுது புதியதாக செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. அதில், கொரோனா வைரஸ் பரவலைக் கருத்தில் கொண்டு, மாணவ மாணவியரின் நலன் கருதி, பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்படுவதாக கூறப்படுகின்றது. மேலும், டிசம்பர் மாதத்திற்குப் பின், பள்ளிகள் திறக்கப்படலாம் என்றுக் கூறப்படுகின்றது.

HOT NEWS