சீனா இன்னும் உண்மையை மறைக்கின்றது! பாம்பியோ குமுறல்!

10 May 2020 அரசியல்
mikepompeo.jpg

சீனா அரசாங்கம் இன்னும் உண்மையை மறைக்கின்றது என, அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸானது, தீவிரமாகப் பரவி வருகின்றது. இந்த வைரஸால் முப்பது லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த வைரஸ் பாதிப்பின் காரணமாக, அமெரிக்கா தான் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. அந்நாட்டில், 75,000 பேர் இந்த வைரஸால் மரணமடைந்து உள்ளனர். பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், தொடர்ந்து சீனா மீது அமெரிக்கா குற்றம் சாட்டி வருகின்றது. சீனாவில் உள்ள வைரஸ் ஆய்வு செய்யும் ஆய்வுக் கூடத்தில் இருந்து தான், இந்த வைரஸ் கசிந்துள்ளது என டிரம்ப் கூறி வருகின்றார். அதற்கான ஆதரங்கள், தன்னிடம் உள்ளதாகவும் அவர் தெரிவித்து வருகின்றார்.

அவரைத் தொடர்ந்து, தற்பொழுது அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ, சீனாவில் உள்ள தரக் குறைவான ஆய்வுக் கூடத்தில் இருந்து தான் இந்த வைரஸ் பரவி இருக்கின்றது. தற்பொழுது வரை, சீனா எப்படி இந்த வைரஸை குணப்படுத்தியது எனக் கூறவில்லை. இதனை எப்படி எதிர் கொண்டார்கள் எனவும், சீனா கூற மறுக்கின்றது.

இந்த வைரஸ் எங்கிருந்து உருவானது என, யாருக்கும் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், சீனாவின் ஊஹான் பகுதியில் இருந்து தான், இது பரவ ஆரம்பித்து என நம் அனைவருக்கும் தெரியும். 120 நாட்களைக் கடந்த பின்பும், சீனாவின் கம்யூனிச அரசாங்கம், இது குறித்து பல விஷயங்களை மறைத்து வருகின்றது எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

HOT NEWS