பார்சிலோனாவிற்காக விளையாட மெஸ்ஸி முடிவு! அடுத்த ஆண்டு வெளியேறுவார் என தகவல்!

07 September 2020 விளையாட்டு
messiballon.jpg

தன்னுடைய கால்பந்து கிளப் அணியில் இருந்து விலக உள்ளதாக அறிவித்த மெஸ்ஸி, தற்பொழுது பார்சிலோனா அணிக்காவே தொடர்ந்து விளையாட முடிவு செய்து உள்ளார்.

பார்சிலோனா அணயில் கிட்டத்தட்ட 16 ஆண்டுகளுக்கு மேலாக, மெஸ்ஸி விளையாண்டு வருகின்றார். அந்த அணிக்காக அவர் பல சாதனைகளையும், விருதுகளையும் குவித்து உள்ளார். அடுத்த 2021ம் ஆண்டுடன், அவருடைய ஒப்பந்தமானது முடிவடைய உள்ளது. இதனால், அவர் தற்பொழுதே அந்த அணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். தன்னை, இலவச அடிப்படையில் வெளியேற்ற அனுமதியும் கேட்டார்.

ஆனால், மெஸ்ஸியின் மதிப்பு 6000 கோடி எனவும், அதனைக் கொடுக்கும் அணிக்கே, மெஸ்ஸி அனுப்பப்படுவார் எனவும், பார்சிலோனா கூறியது. தொடர்ந்து, பார்சிலோனா அணியின் நிர்வாகமும், மெஸ்ஸியின் குடும்பமும் நடத்தியப் பேச்சுவார்த்தையினைத் தொடர்ந்து, இந்த ஆண்டு மட்டும் அவர் பார்சிலோனா அணிக்காக விளையாட மெஸ்ஸி முடிவு செய்துள்ளார். அவர் அடுத்த ஆண்டு, அந்த அணியில் இருந்து வெளியேறிவிடுவார் என, அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், பார்சிலோனா அணியில் இருந்து உலகப் புகழ்பெற்ற லூயிஸ் சுவாரஸ் என்ற வீரர், தற்பொழுது இத்தாலியின் யுவென்சட்சஸ் அணிக்கு சென்றுள்ளார். அந்த அணியில் ஏற்கனவே, கிறிஸ்டியானோ ரொனால்டோ இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS