நெட்பிளிக்ஸை பிடித்த மாஸ்டர்! பொங்கலுக்கு ஓடிடியில் வெளியாவது உறுதி!

28 November 2020 சினிமா
masterottt.jpg

சூரரைப்போற்றுத் திரைப்படத்தினைத் தொடர்ந்து, விஜய் நடிப்பில் உருவாகி உள்ள மாஸ்டர் திரைப்படமும் தற்பொழுது ஓடிடியில் வெளியாவது உறுதியாகி உள்ளது.

விஜய், விஜய்சேதுபதி நடிப்பில், சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் மாஸ்டர். இந்த திரைப்படமானது, இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாக இருந்தது. இந்த சூழலில், கொரோனா தொற்றுக் காரணமாக ஊரடங்கு உத்தரவானது அறிவிக்கப்பட்டது. இதனால், திரையறங்குகள் அனைத்தும் மூடப்பட்டன. இந்த சூழலில், இந்தப் படத்தினை ஓடிடியில் வெளியிடுவது குறித்த செய்திகள், தொடர்ந்து வெளியான வண்ணம் இருந்தன.

அதனை, அப்படக்குழுவினர் மறுத்து வந்தனர். இந்த சூழலில், தொடர்ந்து ஊரடங்கு அமலில் இருந்து வருவதாலும், கொரோனா தொற்றுக் காரணமாக திரையறங்குகள் இன்னும் முழுமையான செயல்பாட்டிற்கு வரவில்லை. தமிழகத்தில் தற்பொழுது திரையறங்குகள் திறக்கப்பட்டு இருந்தாலும், சமூக இடைவெளியினைப் பின்பற்றுவது உள்ளிட்டப் பல்வேறு விஷயங்கள் பின்பற்றப்பட வேண்டி உள்ளதால், திரையறங்க இருக்கைகளின் எண்ணிக்கையானது பாதியாக குறைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், பொதுமக்களில் பெரும்பாலானவர்கள் திரையறங்கிற்கு வருவதைக் குறைத்துக் கொண்டு உள்ளனர். இதனால், திரையறங்குகள் அனைத்தும் வெறிச்சோடி உள்ளன. இதனைக் கருத்தில் கொண்டே, சூர்யாவின் சூரரைப் போற்று படமானது, அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. அது 100 கோடி ரூபாயினை வசூல் செய்து அசத்தியது. இதனால், விஜயின் மாஸ்டர் படமும் ஓடிடியில் வெளியிட முடிவு செய்துள்ளனர்.

நெட்ப்ளிக்ஸ் நிறுவனமானது, மாஸ்டர் திரைப்படத்தினை பெரும் தொகைக்கு வாங்கியிருப்பதாகவும், பொங்கலுக்கு இப்படம் ஓடிடியில் வெளியாகும் எனவும் கூறப்பட்டு உள்ளன.

HOT NEWS