மாவோயிஸ்டுகளை விட மோசமானது பாஜக! மம்மதா பேனர்ஜி கடும் தாக்கு!

20 January 2021 அரசியல்
mamatabanerjee.jpg

மவோயிஸ்டுகளை விட மிகவும் மோசமானது பாஜக தான் என, மம்மதா பேனர்ஜி தெரிவித்து உள்ளார்.

மேற்கு வங்கத்தில், விரைவில் சட்டமன்றத் தேர்தலானது நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில், பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் ஆகியவை, நேருக்கு நேர் மோதுகின்றன. இந்த சூழலில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து பலரும் பாஜவில் சேர்ந்து வருகின்றனர். இது குறித்து பேசிய மம்மதா பேனர்ஜி, யார் வேண்டும் என்றாலும், நம் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேரட்டும்.

நான் ஒரு போதும் பாஜகவிற்கு அடிபணிய மாட்டேன். அரசியல் என்பது புனிதமான சித்தாந்தம் சம்பந்தப்பட்டது. அதனை ஆடையினை மாற்றுவது போல், தினமும் மாற்றக் கூடாது. பாஜக மாவோயிஸ்டுகளை விட மிகவும் கொடுமையானது என்றும், உள்ளூரில் உள்ள ஆதிவாசிகளின் வாக்குகளைப் பெற்றப் பின்னர், அவர்களை பாஜக ஏமாற்றியுள்ளது எனவும் அவர் பகிரங்கமாக சாடியுள்ளார்.

HOT NEWS