செப்டம்பர் வரை நீட்டிக்கப்படுமா? அதிர்ச்சி அளிக்கும் ஆய்வின் முடிவு!

04 April 2020 அரசியல்
coronaquarantine1.jpg

செப்டம்பர் வரை இந்தியாவில் ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக, அமெரிக்க ஆய்வு ஒன்று கூறுகின்றது.

பிஸ்னஸ் டுடே மற்றும் மணிகண்ட்ரோல் என்ற புகழ் பெற்ற இணையதள செய்தி நிறுவனங்கள், தங்களுடைய வலைதளத்தில் ஒரு செய்தியினை வெளியிட்டுள்ளன. அது, அமெரிக்காவின் ஆய்வு நிறுவனங்களுள் ஒன்றான பாஸ்டன் ஆலோசனைக் குழுவின் ஆய்வு முடிவினைப் பற்றியது தான். உலகில் உள்ள ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நாடுகளினைப் பற்றி அந்நிறுவனம் ஆய்வு செய்துள்ளது.

அதன்படி, எந்தெந்த நாட்டில் எவ்வளவு நோயாளிகள் உள்ளனர். யாருக்கு, எவ்வளவு வசதிகள் தேவை. மருத்துவக் கருவிகளின் அளவுகள் என்ன, எவ்வளவுப் பற்றாக்குறை உள்ளது. ஊரடங்கு எந்தளவில் கடைபிடிக்கப்படுகின்றது. நோய் பரவும் விதம் எந்த அளவில் உள்ளது உள்ளிட்ட, பல விஷயங்களைக் கருத்தில் கொண்டு இந்த ஆய்வினை செய்துள்ளனர்.

அந்த ஆய்வின்படி, இந்தியாவில் தற்பொழுது அமல்படுத்தப்பட்டுள்ள இந்த ஊரடங்கு உத்தரவானது, ஜூன் மாதம் வரை நீட்டிகப்பட வாய்ப்புள்ளது எனவும், மேலும் இது செப்டம்பர் வரைக் கூட நீளும் வாய்ப்புகள் உள்ளன எனவும் கூறியுள்ளது. தற்பொழுது இந்தியாவில் நோய் பரவும் தன்மை உள்ளிட்டப் பலக் காரணிகள், இதில் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS