கர்நாடகாவில் கடும் வெள்ளம்! மத்திய குழு ஆய்வு!

04 September 2020 விளையாட்டு
karnatakaflood.jpg

கர்நாடகாவில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளத்தினை ஆய்வு செய்ய, மத்திய குழுவானது தற்பொழுது வருகை தருகின்றது.

தென் மேற்குப் பருவ மழையானது, தற்பொழுது இந்தியாவில் வழுவடைந்து உள்ளது. இந்தப் பருவ மழையால், வட இந்தியாவில் கடும் வெள்ளம் ஏற்பட்டு உள்ளது. பீகார், ஒடிசா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கடும் மழை செய்தது. அங்கு தற்பொழுது மழைக் குறைந்துள்ள காரணத்தால், வெள்ளம் இல்லாமல் உள்ளன. இந்த சூழ்நிலையில், தற்பொழுது கர்நாடகா மாநிலத்தில் கடும் மழையால், வெள்ளம் ஏற்பட்டு உள்ளது.

கர்நாடகாவின் குடகு மற்றும் பாகல்கோட், விஜயாபுரா, பெலகாவி உள்ளிட்ட பல மாவட்டங்களில், கடும் வெள்ளம் ஏற்பட்டு உள்ளது. இந்த வெள்ளத்தால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்தக் கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக, 4800 கோடிக்கும் அதிகமான விவசாய நிலங்கள் சேதமடைந்து இருப்பதாக, மத்திய அரசிடம் அறிக்கை அளித்தது, கர்நாடக அரசு.

இந்த வெள்ளச் சேதம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்காணித்து ஆய்வு செய்யவும், அறிக்கை சமர்பிப்பதற்காகவும் மத்திய அரசு குழு ஒன்றினை கர்நாடகாவிற்கு அனுப்பி உள்ளது.

HOT NEWS