கபில்தேவ் உடல்நலம் தேறினார்! ஆஞ்சியோபிளாஸ்டி வெற்றிகரமாக முடிந்தது!

24 October 2020 விளையாட்டு
kapildevhospital.jpg

திடீரென்று நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்ட கிரிக்கெட் வீரர் கபில்தேவ், தற்பொழுது உடல்நலத்துடன் உள்ளார் என, மருத்துவமனை தெரிவித்து உள்ளது.

உலகக் கோப்பையினை இந்திய அணிக்கு முதன் முதலாக பெற்றுத் தந்த பெருமைக்கு உரிய கேப்டனாக கபில்தேவ் இருந்து வருகின்றார். 61 வயதான அவருக்கு, திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவர் அவசர அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டெல்லியில் உள்ள மருத்துவமனையில், உடனடியாக ஆஞ்சியோபிளாஸ்டி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, அவர் தற்பொழுது நலமுடன் இருப்பதாக, அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்ற மருத்துவமனைத் தெரிவித்து உள்ளது. தொடர்ந்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவர்களால் கண்காணிக்கப்பட்டு வருகின்றார். அவர் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில், தான் நலமுடன் இருப்பதாக அவர் புகைப்படத்தில் போஸ் கொடுத்து உள்ளார்.

HOT NEWS