வரும் தேர்தலில் கழகங்களுடன் கூட்டணி கிடையாது! கமல் அதிரடி!

21 December 2020 அரசியல்
kamalhaasanalliance.jpg

வருகின்ற சட்டமன்றத் தேர்தலில், தமிழகத்தின் எந்தக் கழகத்துடனும் கூட்டணி கிடையாது என, மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்து உள்ளார்.

இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு உள்ள கமல்ஹாசன், செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் பேசுகையில், இந்த தேர்தலில் எந்த ஒரு கழகத்துடனும் கூட்டணிக் கிடையாது என்றுக் கூறியுள்ளார். எல்லாரும் வறுமைக் கோட்டிற்கு மேலே, பொதுமக்களின் வாழ்க்கையினை கொண்டு செல்ல முயல்வதாகக் கூறுகின்றனர். ஆனால், நாங்கள் செழிப்பான வாழ்க்கைக் கோட்டிற்கு மேலே, பொதுமக்களைக் கொண்டு செல்ல வேண்டும் திட்டமிட்டு உள்ளோம் என்றுக் கூறியுள்ளார்.

தமிழகத்தில் அதிகம் படித்த இளைஞர்கள் உள்ளனர். அவர்கள் வேலைத் தேடுபவர்களாக இல்லாமல், தொழில்முனைவோர்களாக மாற்றுவதே எங்களின் கடமை ஆகும். நாளுக்கு நாள் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து வருகின்றது. இல்லத்தரசிகளுக்கும் ஊதியம் எனும் திட்டம் கொண்டு வரப்படும். சிறுதொழில் முனைவோருக்கு அதிக முக்கியத்தும் அளிக்கப்படும். மக்கள் முன்னிலையில், நம்முடைய மக்கள் நீதி மய்யம் நேர்மையான விஷயங்களை வைத்தே தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் என்றுக் கூறியுள்ளார்.

HOT NEWS