ஏன் கமல்ஹாசன் வேகமாகப் பிரச்சாரம் செய்கின்றார் தெரியுமா? காரணம் இதோ!

11 January 2021 அரசியல்
kamalcampaign.jpg

தேர்தல் தேதி அறிவித்த பின்னரே, பொதுவாக அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும். ஆனால், தற்பொழுது தமிழகத்தின் நிலையே வேறு. திமுக, அதிமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்டக் கட்சிகள் தற்பொழுதே, தேர்தல் பரப்புரையில் ஈடுபட ஆரம்பித்து விட்டனர். இந்த நிலையில், கமல்ஹாசன் தற்பொழுது தன்னுடைய சூறாவளிப் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளார்.

அவர் தெற்கு மண்டலத்தினை முடித்து விட்டு, தற்பொழுது கொங்கு மண்டலத்தினைக் குறி வைத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றார். அவர் ஏன், இவ்வளவு விரைவாகத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றார் எனப் பலரும் கேள்வி எழுப்பி வருகின்ற நிலையில், அவர் இவ்வாறு செய்வதற்குப் பலக் காரணங்கள் இருப்பதை நம்மால் கணிக்க முடிகின்றது. நாம் தமிழர் கட்சியினர், தேமுதிக கட்சியினர், பாமக கட்சியினர் உட்பட யாரும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை.

கமல் மட்டும் திமுக, அதிமுகவினை விட அதிக நேரம் பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றார். அதிக கூட்டங்களில் கலந்து கொள்கின்றார். அதிக நபர்களை சந்தித்து வருகின்றார். இவைகளுக்கு எல்லாம் முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுவது விக்ரம் படம் தான். கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் இந்தியன் 2. இந்தப் படத்தினை, இந்த ஆண்டு தேர்தலுக்கு முன் வெளியிடும் முடிவில், இந்தப் படத்தில் கமல்ஹாசன் நடித்து வந்தார்.

ஆனால், அவரால் அந்தப் படத்தில் தொடர்ந்து நடிக்க முடியாமல் போய்விட்டது. தொடர்ந்து, தயாரிப்பு நிறுவனத்தில் பிரச்சனை, படம் எடுப்பதில் பிரச்சனை, கொரோனா ஊரடங்குக் காரணமாக, இந்தப் படமானது கிடப்பில் உள்ளது. இந்தப் படத்தினை, அடுத்த 2022ம் ஆண்டு தான் வெளியிட முடியும். இதனைக் கருத்தில் கொண்டு, தற்பொழுது இந்தத் தேர்தலுக்கு முன்னர், ஒரு படத்தினை வெளியிட கமல்ஹாசன் திட்டமிட்டு உள்ளார். முழுக்க அரசியல், அரஜாகம், ஊழல் இவைகளை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படமானது உருவாக்கப்பட உள்ளது.

அதற்காகத் தான் விக்ரம் படத்தில் அவசர அவசரமாக இணைந்துள்ளார். இந்தப் படத்தினை இயக்குநரும், கமல்ஹாசனின் வெறித்தனமான ரசிகருமான லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க உள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங்கானது, தைப் பொங்கலை ஒட்டி, பூஜையுடன் ஆரம்பிக்க உள்ளது. இதனால் தான் தற்பொழுது அவர் சூறாவளிப் பிரச்சாரத்தையே ஆரம்பித்து உள்ளார். படத்தின் சூட்டிங்கிற்கு 30 நாட்கள் மட்டுமே கால்சீட் தர முடிவு செய்துள்ளார்.

மிக விரைவாக இந்தப் படம் தயாரிக்கப்பட்டு, தேர்தலுக்கு முன் வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக, வருகின்ற பிப்ரவரி மாதம் வரை தேர்தல் பணிகளில் மற்ற நபர்களை ஈடுபடுத்தி விட்டு, பின்னர் படத்தின் சூட்டிங் முடிந்ததும் மீண்டும் சூறாவளிப் பிரச்சாரத்தில் அவர் ஈடுபட உள்ளாராம். இதற்காகத் தான், முதலிலேயே தேர்தல் பிரச்சாரத்தில் அவர் ஈடுபட்டு உள்ளார்.

HOT NEWS