கிரிக்கெட் வீரர் ஜோகிந்தர் சர்மா என்ன செய்கின்றார் தெரியுமா? குவியும் பாராட்டுக்கள்!

30 March 2020 விளையாட்டு
jogindersharma.jpg

இந்திய கிரிக்கெட் அணியானது, கடந்த 2007ம் ஆண்டு நடைபெற்ற, உலக டி20 கிரிக்கெட்போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. அந்தப் போட்டியில், கடைசி ஓவரில் பந்து வீசிய ஜோகிந்தர் ஷர்மா, அனைவராலும் பாரட்டப்பட்டார்.

அவர் அதனைத் தொடர்ந்து, அவர் 2007ம் ஆண்டு முதல் டிஎஸ்பியாக பணியாற்றி வருகின்றார். தற்பொழுது இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், இந்தியாவின் ஹரியானா மாநிலத்தின் ஹிசார் பகுதியில், அவர் காணப்பட்டார்.முகத்தில் கருப்பு நிற முகமூடி அணிந்து கொண்டு, கொரோனா விழிப்புணர்வில் ஈடுபட்டு வருகின்றார்.

போலீஸ் அதிகாரியாக இருக்கும் ஜோகிந்தர் ஷர்மா, தற்பொழுது அனைவரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளார். அவரை, கௌரவப்படுத்தியுள்ள ஐசிசியானது, உலக ஹீரோ எனப் புகழ்ந்துள்ளது.

2007ம் ஆண்டு டி20 ஹீரோ, 2020ம் ஆண்டு நிஜ உலகின் நாயகன் எனவும் புகழ்ந்து தள்ளியது. இந்திய கிரிக்கெட் அணியின் வீரராக இருந்து வந்த ஜோகிந்தர் ஷர்மா, தற்பொழுது பொதுமக்களுக்காக தன்னுடைய சேவையினைச் செய்து வருகின்றார் எனக் கூறியுள்ளது.

இது குறித்து அவர் பேசுகையில், நான் 2007ம் ஆண்டு முதல், போலீஸ் டிஎஸ்பியாக உள்ளேன். காலையில் எப்பொழுதும் ஆறு மணிக்கு எங்களுடையப் பணி துவங்கும். பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது, ரோந்து பணிகளை மேற்கொள்வது, தேவையின்றி நடமாடுவோரை வீட்டுக்கு அனுப்புவது உள்ளிட்டவைகளை செய்து வருகின்றோம் என்றுக் கூறியுள்ளார்.

HOT NEWS