யார் இந்த ஜோ பிடன்? அமெரிக்க அதிபராகும் ஜோ பிடன் வாழ்க்கை வரலாறு!

07 November 2020 அரசியல்
joebiden11.jpg

தற்பொழுது உலகம் முழுவதும் பேசப்படும் நபராக இருப்பவர் அமெரிக்காவினைச் சேர்ந்த ஜோ பிடன் ஆவார். அவரைப் பற்றி, தற்பொழுது விரிவாக பார்ப்போம்.

1942ம் ஆண்டு நவம்பர் மாதம் 20ம் தேதி அன்று, பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள ஸ்காரான்டன் பகுதியில் அமைந்துள்ள செயின்ட் மேரி மருத்துவமனையில், ஜோசப் ரோபினெட்டி பிடன் சீனியர் மற்றும் கேத்ரின் யூஜினா தம்பதிகளுக்கு இவர் பிறந்தார். இவரின் இயற்பெயர் ஜோசப் ரோபினெட்டி பிடன் ஜூனியர். சுருக்கமாக ஜோ பிடன் என அழைக்கின்றனர். மிகப் பழமையான கத்தோலிக்கக் குடும்பத்தினைச் சேர்ந்த இவருக்கு வாலரே என்ற சகோதரியும், பிரான்சிஸ் மற்றும் ஜேம்ஸ் என்ற சகோதரர்களும் உள்ளனர். இவருடைய தாய் ஐரிஸ் பரம்பரையினைச் சேர்ந்தவர்.

ஜோ பிடன் தாத்தா எண்ணெய் வர்த்தகத்தில், அதிக செல்வாக்கு உள்ளவராக இருந்தவர். இவர்களுடைய குடும்பம் இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்டப் பல ஐரோப்பிய நாடுகளில் வர்த்தகம் செய்து வந்தது. பிடனின் தந்தை பணக்காரராக இருந்த போதிலும், காலப் போக்கில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக பணப் பற்றாக்குறையினை சந்தித்தார். இதனை முன்னிட்டு ஜோ பிடனும், அவருடைய சகோதர, சகோதரியும் அவர்களுடைய பாட்டியின் வீட்டில் சிறிது வாழ்ந்தனர்.

இந்த சூழ்நிலையில் பிடனின் தந்தை சீனியர் பிடனோ, நிரந்தரமான வேலை என எதுவும் இல்லாமல் கஷ்டப்பட்டு வந்தார். அதன் பின்னர், அமெரிக்காவின் டெல்லாவேர் மாகாணத்தில் தங்கி வாழ்ந்தனர். அவருடையத் தந்தை, சிறிது காலத்தில் மிகச் சிறந்த கார் விற்பனையாளராக மாறினார். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ற தகுதியினை அவர்கள், பொருளாதார அடிப்படையில் பெற்றனர்.

ஆர்க்மீர் அகாடமியில் பள்ளிப் படிப்பினை ஜோ பிடன் ஆரம்பித்தார். அவர் அமெரிக்க புட்பால் விளையாட்டல் திறமையுள்ளவராகவும், அணியின் தலைவராகவும் இருந்துள்ளார். ஆனால், படிப்பிலோ மிகவும் சுமார் தான். வகுப்பறையின் தலைவனாக ஆரம்பக் கல்வி முதல் உயர் கல்வி வரையிலும் அவர் இருந்துள்ளார்.

1965ம் ஆண்டில் பிஏ படிப்பினை வெற்றிகரமாக முடித்தார். 1966ம் ஆண்டு, நெய்லியா ஹண்டர் என்பவரை, ஜோ பிடன் திருமணம் செய்தார். இவர்களுக்கு 3 அழகியக் குழந்தைகளும் பிறந்தனர். தொடர்ந்து படித்த பிடன் 1968ம் ஆண்டின் பொழுது, சட்டப் படிப்பினை வெற்றிகரமாக முடித்தார். பின்னர், 1968ம் ஆண்டு வில்மிங்டன்னில் கிளர்க்காக வேலையினை ஆரம்பித்தார். 1969ம் ஆண்டு வழக்கறிஞராக தன்னுடையப் பணியினை ஆரம்பித்தார். இவரும் இவருடன் இணைந்து மற்றொரு வழக்கறிஞரும் இணைந்து, கார்ப்பரேட் சட்டத்தினை உருவாக்கினர்.

அதனைத் தொடர்ந்து 1972ம் ஆண்டு, ரிபப்பிளிக்கின் கட்சியினைச் சேர்ந்த காலப் போக்ஸ் என்பவரை, பிடன் வீழ்த்தி டெல்லாவேர் மாகாணத்தில் இருந்து, ஜூனியர் அமெரிக்க செனட்டராக வெற்றி பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டார். 1972ம் ஆண்டு பிடனின் மனைவி நெய்லியா ஹண்டர் மற்றும் அவருடைய மகள் ஆகியோர் கார் விபத்தில் பலியாகினர். அந்த விபத்தில் காயமடைந்த தன்னுடைய இரண்டு மகன்களையும் வளர்க்கும் பொருட்டு, தன்னுடையப் பதவியினை பிடன் ராஜினாமா செய்தார். இவர் தன்னுடைய 30வது வயதிலேயே அமெரிக்காவின் சென்னட்டர் என்றப் பதவியினைப் பிடித்து அசத்தினார். ஆறாவது இளம் சென்னட்டர் என்றப் பெருமையும் இவருக்குக் கிடைத்தது.

1977ம் ஆண்டு ஜில் ட்ரேசி ஜேக்கப்ஸ் என்ற ஆசிரியையினை, பிடன் 2வதாக திருமணம் செய்து கொண்டார். 1974ம் ஆண்டுகளிலேயே, வளர்ந்து வருகின்ற எதிர்கால முகங்கள் என்ற தலைப்பில், 200 நபர்களின் பெயர்களை டைம்ஸ் பத்திரிக்கை பட்டியலிட்டது. அதில், பிடனுடையப் பெயரும் இடம் பிடித்தது. ரொனால்ட் ரீகன், ஜிம்மி கார்ட்டர் உள்ளிட்டப் பிரபல அமெரிக்க அதிபர்களின் ஆட்சியில், இவர் தொடர்ந்து பதவியிலேயே இருந்து வந்தார். 1993ம் ஆண்டு ஓரினச் சேர்க்கையாளர்கள், அமெரிக்க இராணுவத்தில் இருக்கக் கூடாது என நடைபெற்றத் தேர்தலில் வாக்காளித்தார். அதே போல், 1996ம் ஆண்டு, ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணம் செய்து கொள்ளலாமா என்ற சட்டத்திற்கு எதிராகவும், பிடன் வாக்களித்தார். ஆனால், அந்த சட்டமானது பின்னர் 2015ம் ஆண்டு நீக்கப்பட்டது.

1988ம் ஆண்டுகளில் தொடர்ந்து கடுமையான கழுத்து வலி, உள்ளிட்டப் பிரச்சனைகள் காரணமாக, அறுவை சிகிச்சை செய்து கொண்டார். பின்னர், அவருடைய மூளையிலும் அறுவை சிகிச்சை நடைபெற்றது. அமெரிக்காவில் இவர் வகிக்காத பதவிகளே இல்லை என்றுக் கூறலாம். சென்னடர் கமிட்டியில் ஜூடிசரியாகவும், பிற்படுத்தப்பட்டவர்களின் குழுவில் உறுப்பினராகவும், சென்னட்டராகவும், துணை அதிபராகவும் இவர் பதவி வகித்துள்ளார். சென்னட் சபையில் மிகவும் குறைவான சொத்து மதிப்பினை உடையவராக, பிடன் இருக்கின்றார்.

அவருடைய சொத்து மதிப்பானது, தற்பொழுது 20 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் குறைவாகவே கணக்கிடப்பட்டு உள்ளது. 2008ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க தேர்தலில், ஜோ பிடன் அவருடைய டெமாக்ராடிக் கட்சியின் சார்பில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. அவருடையப் பெயரும் அதில் அடிபடவே செய்தது. ஆனால், ஏழு மாதங்களுக்குப் பிறகு, பாராக் ஒபாமா அதிபர் பதவிக்கு போட்டியிடத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்பொழுது, ஜோ பிடன், துணை அதிபர் பதவிக்கு போட்டியிடத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த ஜோடியானது, 2009ம் ஆண்டு மகத்தான வெற்றியினை ருசித்தது.

ஒசாமா பின்லேடனை கொல்வதற்காக, அமெரிக்கா தன்னுடைய இரகசியப் பாதுகாப்பு படையினை, பாகிஸ்தானிற்குள் அனுப்பியது. அதனை வெள்ளை மாளிகையில் இருந்து நேரடியாக ஒபாமா பார்த்தார். அவருடன் இருந்தவர்களில், பிடனும் ஒருவர். 2012ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில், நீங்களே துணை அதிபர் பதவிக்கு போட்டியிட வேண்டும் என, ஒபாமா பிடனிடம் கூறியிருக்கின்றார். இருப்பினும், ஒபாமாவின் செல்வாக்கு சரிந்ததாக எண்ணிய பிடன், அதிலிருந்து பின் வாங்கினார். அதனைத் தொடர்ந்தே, ஹிலாரி கிளிண்டன் பெயர் பரிந்துரைக்கப்பட்டது.

இருப்பினும், 2012ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், பிடனே மீண்டும் போட்டியிட்டார். அதற்கு முக்கியக் காரணமாகக் கருதப்பட்டது, மக்களின் செல்வாக்கும், அவருடைய கடுமையான உழைப்பும் ஆகும். ஒபாமா மற்றும் பிடன் கூட்டணியானது 2012ம் ஆண்டு நடைபெற்றத் தேர்தலில், 332 இடங்களில் வெற்றி பெற்று அபார சாதனைப் படைத்தது. இதனைத் தொடர்ந்து, ஒபாமாவுக்கும் பிடனுக்கும் இடையில், சில கருத்து மோதல்கள் வெடித்தன. இருப்பினும், அது பெரிய அளவில் வெளியில் தெரியவில்லை.

தொடர்ந்து, பிடன் பல சர்வதேசத் தலைவர்களை சந்தித்துப் பேசினார். பல நாட்டுத் தலைவர்களை, அமெரிக்காவிற்கு அழைத்து கூட்டங்களை நடத்தினார். 2016ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், பிடன் டெமோக்ராட் கட்சியின் சார்பாக போட்டியிடுவார் என, மக்களால் எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், கட்சியில் இருந்த ஒரு சிலர், ஹிலாரி கிளிண்டனுக்கு தங்களுடைய ஆதரவினை தெரிவித்ததால், அந்தத் தேர்தலில் பிடன் போட்டியிடவில்லை.

அந்தத் தேர்தலில் இருந்தே, டொனால்ட் ட்ரம்பிற்கும் பிடனுக்கும் ஆகாது. அதனை வைத்துத் தான், இந்த தேர்தலில் டிரம்பினை வீழ்த்த களமிறக்கியது டெமோக்ராடிக் பார்ட்டி. அந்தக் கட்சியின் மிகுந்த செல்வாக்கு உள்ள நபராகவும், மக்களின் நம்பிக்கை நாயகனாகவும் இருக்கின்ற காரணத்தால், அந்தக் கட்சியின் சார்பில், 2020ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், அவர் அக்கட்சியின் சார்பில் அதிபர் போட்டிக்கு களமிறக்கப்பட்டார். அதில் அவர் வெற்றியும் பெற்றுள்ளார்.

சாதாரணக் குடும்பத்தில் பிறந்து, படிப்படியாக உழைப்பின் மூலமாக வளர்ந்து, இன்றைக்கு அமெரிக்காவின் அதிபராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் ஜோ பிடன்.

HOT NEWS