இஸ்ரேலில் கொரோனாவிற்கு மருந்து! அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

05 May 2020 அரசியல்
coronaisrael.jpg

இஸ்ரேலில் தற்பொழுது உலகம் முழுவதும் பரவி வருகின்ற கொரோனா வைரஸிற்கு, மருந்து கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக, அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர், நப்தாலி பென்னட் இது குறித்து பேசியுள்ளார். அவர் பேசுகையில், நாட்டின் மருத்துவப் பாதுகாப்புத் துறையானது, கொரோனா வைரஸிற்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி மருந்தினைக் கண்டுபிடித்துள்ளது. இது மிகவும் மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும்.

இதனால், யூத இனத்தினை நினைத்துப் பெருமைக் கொள்வதாக அவர் கூறினார். மேலும் அவர் பேசுகையில், இஸ்ரேலின் ஐஐபிஆர் அமைப்பானது, மோனோக்ளோனல் நியூட்ராலைசிங் ஆன்டிபாடி என்ற மருந்தினைத் தயாரித்து உள்ளது. இது நோயாளிகளின் உடலில் உள்ள, எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கச் செய்வதோடு, நோயினையும் கட்டுப்படுத்துகின்றது.

இந்த மருந்தானது, ஆராய்ச்சிகளைத் தாண்டிவிட்ட காரணத்தினால், தற்பொழுது ஊசிகளாக தயாரிக்கப்பட உள்ளன. இதற்கான ஆயத்தப் பணிகளை இஸ்ரேல் அரசாங்கத்தினை ஐஐபிஆர் அமைப்பானது ஆரம்பித்து உள்ளது.

HOT NEWS