தென்னிந்தியாவில் ஐஎஸ் அமைப்பிற்காக ஒரு மாகாணம்! என்ஐஏ அதிர்ச்சி ரிப்போர்ட்!

03 October 2020 அரசியல்
is.jpg

தென்னிந்தியாவில் ஐஎஸ் தீவிரவாதிகள் தங்களுக்கென ஒரு மாகாணத்தினை நிறுவ முயற்சிப்பதாக, தேசிய புலனாய்வு முகமை அமைப்பு அதிர்ச்சி தகவல் தெரிவித்து உள்ளது.

தேசிய புலனாய்வு ஆய்வு முகமை புதிய அறிக்கை ஒன்றினை, மத்திய அரசிடம் தாக்கல் செய்துள்ளது. அதில், கடந்த 2019ம் ஆண்டின் இறுதியில், உலகினை அச்சுறுத்தி வருகின்ற ஐஎஸ் தீவிரவாத அமைப்பானது, தங்களுக்கென ஒரு மாகாணத்தினை அமைப்பதற்காக முயற்சித்துள்ளதாக தெரிவித்துள்ளது. கர்நாடகாவின் காடுகளில் இந்த முயற்சி நடைபெற்றதாகவும், அதற்காக 20க்கும் மேற்பட்டோர் பயன்படுத்தப்பட்டதாகவும் என்ஐஏ தெரிவித்து உள்ளது.

இதில், பாய் என்று அழைக்கப்படக் கூடிய நபர் தான், இதற்கு பல உதவிகளைச் செய்ததாக தெரிவித்து உள்ளது. கடலூரில் வசித்து வருகின்ற கஜா மொய்தீன் என்ற நபர், தன்னுடைய நிலங்கள் மற்றும் சொத்துக்களை விற்று, பண உதவி செய்ததாகவும், மேலும் காடுகளில் வாழ்வதற்காகவும், பயிற்சி பெறுவதற்காகவும் 5 லட்ச ரூபாயினை வழங்கியதாகவும் கண்டுபிடித்து உள்ளது.

பொதுவாக, தென்னிந்தியாவில் செயல்படும் இந்த ஐஎஸ் தீவிரவாதிகளை அல்-ஹிந்த் என அழைக்கின்றனர். இந்த அமைப்பானது, தற்பொழுது கண்டறியப்பட்டு உள்ளது. பெங்களூர் நகரில் உள்ள அல்-ஹிந்த் அறக்கட்டளை இருந்து இந்த அல்-ஹிந்த் பிரிவு செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தீவிர சோதனைகளும் நடத்தப்பட்டு உள்ளதாக, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

HOT NEWS