டிரம்பிற்கு சிறிய அளவிலான ஸ்ட்ரோக்கா? துணை அதிபர் மறுப்பு!

03 September 2020 அரசியல்
donaldtrumptax.jpg

டிரம்பிற்கு சிறிய அளவிலான ஸ்ட்ரோக் ஏற்பட்டதாகவும், அதனால் அவர் அவசர அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அமெரிக்க ஊடகங்களில் தகவல்கள் பரவின. இதற்கு அவருடைய கட்சி மறுப்புத் தெரிவித்து உள்ளது.

தற்பொழுது அமெரிக்காவில் தேர்தல் பிரச்சாரம், விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த சூழலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து கடுமையான வேலைகளைச் செய்து வருகின்றார். இந்த சூழ்நிலையில், திடீரென்று அவர் வால்டர் ரீட் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். இது குறித்த தகவல்கள் தற்பொழுது இணையத்தில் கசிந்த வண்ணம் உள்ளன. அவைகளில், டிரம்ப்பிற்கு லேசான ஸ்ட்ரோக் ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக, அவர் அவசர அவசரமாக அனைத்து வேலைகளையும் கைவிட்டதாகவும் கூறப்படுகின்றது.

அவருக்குப் பதிலாக துணை அதிபர் மைக் பென்ஸ், தற்பொழுது அரசு அலுவல்களைக் கவனித்துக் கொள்கின்றார் எனவும் கூறப்படுகின்றது. இதன் காரணமாகவே, டொனால்ட் ட்ரம்ப் அவரச அவசரமாக மருத்துவமனைக்குச் சென்றுள்ளார் எனவும் கூறப்படுகின்றது. ஆனால், அதனை அவருடையக் கட்சியானது மறுத்துள்ளது. இது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ், இது சாதாரண மருத்துவ சோதனை தான். அவர் பற்றியத் தகவல்களை நான், அளித்துக் கொண்டு தான் இருக்கின்றேன். அவர் தன்னுடைய வேலைகளைத் தொடர்ந்து செய்து கொண்டே இருக்கின்றார் என்றுக் கூறினார்.

ஆனால், இது அவருடைய அப்ப்பாயிண்ட்மென்ட்டில் இல்லை எனவும், திடீரென்று அந்த மருத்துவமனைக்கு அவர் சென்றுள்ளார் எனவும் சிஎன்என் செய்தி நிறுவனம், செய்தி வெளியிட்டு உள்ளது. மேலும், மேரிலேண்டில் உள்ள வால்ட்டர் ரீட் மருத்துவமனைக்கு, யாராவது விஐபி வருவதற்கு முன்னர், அதற்கேற்ற வசதிகள் செய்து தரப்படும். ஆனால், அங்கு அமெரிக்க அதிபர் வருவதற்கான எவ்வித முன்னேற்பாடும் செய்யப்படவில்லை என்று அம்மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்து உள்ளனர்.

HOT NEWS