ஐபிஎல் போட்டிகள் காலவரையறையின்று ஒத்திவைப்பு! பிசிசிஐ அறிவிப்பு!

15 April 2020 விளையாட்டு
ipl.jpg

இந்த ஆண்டு நடைபெற இருந்த ஐபிஎல் போட்டிகள், காலவரையறை இன்று ஒத்திவைக்கப்பட்டு உள்ளன.

இந்த ஆண்டு மார்ச் 29ம் தேதி தொடங்கவிருந்த ஐபிஎல் 13வது சீசனானது, கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து, வருகின்ற மே-3ம் தேதி வரை, ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டு உள்ளதால், அடுத்து எப்பொழுது அந்தப் போட்டி நடைபெறும் என்றக் கேள்வி உருவானது.

கிரிக்கெட் வீரர்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவருமே, இந்த சீசனுக்காக காத்திருக்கின்றனர். இந்நிலையில், பிசிசிஐ அமைப்பின் உயர்மட்ட செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. அதில், பலரும் கலந்து கொண்டு விவாதித்தனர். வீடியோ கான்ப்ரன்ஸ் மூலம், இந்தக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில், ஊரடங்கு எப்பொழுது நீக்கப்படும் எனத் தெரியாது என்பதால், கால வரையறையின்றி இந்த சீசனைத் தள்ளிவைப்பதாக பிசிசிஐ அறிவித்து உள்ளது.

இந்தியாவின் ஐபிஎல் போட்டிகள் மட்டுமல்ல, உலகளவில் நடைபெற இருந்த அனைத்து விளையாட்டுப் போட்டிகளும் தடை செய்யப்பட்டு உள்ளன. இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், டி20 உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறுமா என்றக் கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் உருவாகி உள்ளது. இதனால், கிரிக்கெட் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

HOT NEWS