சீனாவிற்கு எதிராக களமிறங்கிய இந்திய விமானப் படை! அதிகரிக்கும் பதற்றம்!

20 June 2020 அரசியல்
aircraftair.jpg

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில், தற்பொழுது போர் பதற்றம் அதிகரித்து வருகின்றது. இந்த சூழ்நிலையில், இந்திய இராணுவம் சப்தமில்லாமல் அமைதியாகப் பெரிய வேலையினை செய்துள்ளது.

இந்திய வீரர்கள் 20 பேர், சீன இராணுவ வீரர்களின் தாக்குதலால் ஜூன் 15ம் தேதி நள்ளிரவு அன்று பரிதாபமாக தாக்கப்பட்டு உயிரிழந்தனர். இதனால், இந்தியா முழுவதும் கடும் எதிர்ப்பு உருவாகி உள்ளது. இது குறித்து, இந்தியப் பிரதமரும் தொடர்ந்து பல ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார். கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள பாங்க்சோ ஏரிக்கு அருகில் சீன இராணுவம் சுமார் 10,000க்கும் அதிகமான வீரர்களை குவித்துள்ளது.

மேலும், தன்னுடைய பகுதியில் உள்ள பாங்க்சோ ஏரியின் பகுதியினை விரிவுபடுத்தும் வேலையிலும் ஈடுபட்டு வருகின்றது. இதற்கு இந்தியா தற்பொழுது, சப்தமில்லாமல் நெத்தியடி வேலைகளை அசுர வேகத்தில் செய்து வருகின்றது. இந்திய விமானப்படை தலைமை தளபதி ஆர்.கே.எஸ்.பதவுரியா லே பகுதிக்குச் சென்று பார்வையிட்டார். பின்னர், அங்கு ஹெலிகாப்டர்களைத் தரையிறக்குவதற்கான விமானப் படைத் தளங்களை அங்கு இந்தியா அமைத்துள்ளது.

வெறும் மிகக் குறுகியக் காளத்தில் இது அமைக்கப்பட்டு உள்ளது. மேலும், லே பகுதியில் வெறும் ஒரு இராணுவ முகாம் மட்டுமே அங்கு இருந்து வந்தது. இந்நிலையில், தற்பொழுது அங்கு மூன்று இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதனால், அங்கு இந்திய இராணுவத்தின் பலமானது அதிகரித்துள்ளது. இதனை, சீனா தற்பொழுது உண்ணிப்பாக கவனித்து வருகின்றது. இந்தியப் பெருங்கடல் பகுதியில், ஐஎன்எஸ் விக்ரமாதித்யா உட்படப் பலக் கப்பல்கள், தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த மூன்று இராணுவ முகாம்களும் முக்கோண வடிவில் அமைக்கப்பட்டு உள்ளன. இது ராஜதந்திரமாகவே பார்க்கப்படுகின்றது. மேலும், பதுங்கு குழிகளையும், இந்தியா உருவாக்கி வருகின்றது. தொடர்ந்து, லே பகுதியில், இந்தியாவின் வீரர்களை கொண்டு சென்று சேர்ப்பதற்காக, ஹெலிகாப்டர்கள் பறக்கின்றன. அதுமட்டுமின்றி, சுகோய், மிராஜ் மற்றும் ஜாகுவார் போன்ற போர் விமானங்களும் அங்கு களமிறக்கப்பட்டு உள்ளன. இதனை, சீனா எதிர்பார்க்கவில்லை.

அதுமட்டுமின்றி, விரைவாக கனரக ஆயுதங்களையும், டாங்கிகளையும் அங்கு கொண்டு செல்ல, இந்தியா திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன. இதனை சீனா எதிர்பார்க்கவில்லை என்று தான் கூற வேண்டும். வெறும் ஐந்து நாட்களுக்குள் இவ்வளவு விஷயங்களை இந்திய இராணுவம், சப்தமில்லாமல் செய்திருப்பது அங்கு சீனாவின் வயிற்றில் புளியைக் கரைக்க ஆரம்பித்து உள்ளது.

HOT NEWS