சிக்கிம் பகுதியில் இந்தியா சீனா மோதல்! அதிகரிக்கும் பதற்றம்!

11 May 2020 அரசியல்
indiansoldiers.jpg

இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையில் எல்லைப் பிரச்சனையானது பல காலமாக நீடித்து வருகின்றது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், தற்பொழுது இந்திய இராணுவ வீரர்களும், சீன இராணுவ வீரர்களும் கடுமையாக மோதிக் கொண்டனர்.

தற்பொழுது உலகம் முழுவதும், சீனாவில் இருந்து பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸானது, பரவி உள்ளது. இதனால், சீனாவின் மீது பல நாடுகள் அதிருப்தியில் உள்ளனர். இந்த சூழ்நிலையில், தற்பொழுது வடக்கு சிக்கிம் பகுதியில், 16,000 அடி உயரத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருந்த இந்திய இராணுவ வீரர்களுக்கும், சீன இராணுவ வீரர்களுக்கும் இடையில் மோதல் நடைபெற்று உள்ளது.

இரண்டு இந்திய இராணுவ வீரர்கள் மீது சீன வீரர்கள் கல்லால் சண்டையை ஆரம்பித்துள்ளனர். பின்னர், 15 முதல் 20 இந்திய இராணுவ வீரர்கள் இந்த கல்லடி சண்டையில் ஈடுபட்டனர். பின்னர், இரு தரப்பினருக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையினைத் தொடர்ந்து இந்த கல்லடி சண்டையானது முடிவுக்கு வந்தது.

இது போன்ற சம்பவங்கள், அடிக்கடி இரு நாட்டு எல்லை வீரர்களுக்கும் இடையில் நடைபெறுவது வாடிக்கையான விஷயமாகவே பார்க்கப்பட்டு வருகின்றது. கடந்த ஆண்டு, சீனாவின் அதிபர் ஜீ ஜின்பிங், இந்தியாவின் மாமல்லபுரத்திற்கு வந்த சென்றார். இவைகளைத் தொடர்ந்து, அமைதியான சூழல் நிலவ வந்த நிலையில் இப்படியொரு சம்பவம் நடைபெற்றதால், அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகின்றது.

HOT NEWS