இந்தியா அனைத்து போட்டிகளிலும் தோற்கும்! மைக்கிள் வாஹன் கணிப்பு!

28 November 2020 விளையாட்டு
michaelvaughan.jpg

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் சென்றுள்ள இந்திய அணி, அங்கு நடைபெறுகின்ற அனைத்துப் போட்டிகளிலும் தோல்வி அடையும் என, முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கிள் வாஹன் தெரிவித்து உள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியானது, ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப் பயணம் சென்றுள்ளது. அங்கு ஒரு நாள் போட்டிகள், டி20 போட்டிகள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் கொண்டத் தொடரில் விளையாட உள்ளது. முதல் ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணியானது, 375 ரன்களைக் குவித்தது. ஆனால், இந்திய அணியோ 8 விக்கெட்டுகளை இழந்து, வெறும் 308 ரன்களை எடுத்து 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியினைத் தழுவியது. இது குறித்துக் கருத்துத் தெரிவித்து உள்ளார் ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கிள் வாஹன்.

அவர் இது குறித்து கூறுகையில், இந்திய கிரிக்கெட் அணியானது, ஓல்ட் ஸ்சூல் போல உள்ளது. அவர்களிடம் ஒற்றுமையினைப் பார்க்க இயலவில்லை. அவர்களால் ஓரணியாக செயல்பட முடியவில்லை. அவர்கள் ஐபிஎல் போட்டிகளில் இணைந்து விளையாடிய போதிலும், அவர்களிடம் ஏதோ ஒன்று குறைகின்றது. அவர்கள் இந்த சுற்றுப் பயணத்தில், அனைத்துப் போட்டிகளிலும் தோல்வி அடைவர் எனக் கருதுகின்றேன் எனத் தெரிவித்து உள்ளார்.

HOT NEWS