39,000 கோடிக்கு ஆயுதங்கள்! மத்திய அரசு ஒப்புதல்! பலம் பெரும் இந்திய முப்படை!

03 July 2020 அரசியல்
indiaattackpok.jpg

38,900 கோடிக்கு இந்தியாவின் முப்படைகளுக்கும் ஆயுதங்களை வாங்க, மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் போர் மூளும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இரண்டு நாட்டு இராணுவமும், லடாக் பகுதியில், தன்னுடைய இராணுவத் துருப்புகளை அதிகப்படுத்திக் கொண்டே உள்ளனர். சீனாவின் அத்துமீறலை சமாளிக்கவும், எதிர் தாக்குதலுக்கு தயாராகும் விதத்திலும் இந்திய இராணுவத்திற்காக, புதிய ஆயுதங்கள் வாங்கப்பட்டு வருகின்றன.

நேற்று, 18000 கோடி மதிப்புடைய 33 போர் விமானங்களை வாங்க, மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. அதன்படி, 12 சுகோய் போர் விமானங்களும், 21 மிக்-29 போர் விமானங்களும் வாங்கப்பட உள்ளன. மேலும், தற்பொழுது களத்தில் உள்ள 59 போர் விமானங்களையும் மேம்படுத்துவதற்கும் அவைகளைத் தயாரிக்கும் ரஷ்யாவிடம் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.

அதே போல், தற்பொழுது புதிய திட்டத்திற்கும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, தற்பொழுது புதிதாக 1000 கிலோமீட்டர் வரை சென்று, எதிரிகளின் இலக்கினைத் தாக்கும் அஸ்த்ரா ஏவுகணைகள், பினாகா ஏவுகணை அமைப்புகள் உள்ளிட்டவைகளை வாங்க மத்திய அரசு அனுமதித்துள்ளது. இதற்காக 38,900 கோடி ரூபாயானது ஒதுக்கப்பட்டு உள்ளது. இது குறித்து மத்திய அமைச்சகம் தெரிவிக்கையில், என்பது சதவிகிதத்திற்கும் அதிகமான ஆயுதங்களை இந்திய நிறுவனங்களிடம் இருந்து, வாங்க உள்ளதாகவும் இதற்காக 31,130 கோடி ரூபாயானது ஆகும் என்றும் கணக்கிட்டு உள்ளது.

இவ்வாறு ஆயுதங்கள் வாங்குவதன் மூலம், இந்தியாவின் முப்படைகளும் தற்பொழுது புதிய வலிமையை அடையும் என்றுக் கூறப்படுகின்றது.

HOT NEWS