எங்கள் விஷயத்தில் நீங்கள் நுழையாதீர்கள்! சீனாவிற்கு இந்தியா கடுமையான எச்சரிக்கை!

16 October 2020 அரசியல்
modichina.jpg

எங்களுடைய உள்நாட்டு விவகாரங்களில் நீங்கள் தலையிடக் கூடாது என, சீனாவிற்கு இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில், மோதல் நீடித்து வருகின்றது. இரு நாடுகளும், தொடர்ந்து அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. இரு நாடுகளும் தங்களுடையப் படைகளை வாபஸ் பெறுவதாக அறிவித்த பின்னரும், இரு நாடுகளுக்கு இடையிலும் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகின்றது. இது குறித்து பேசியுள்ள சீனா வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் சாவோ லிஜியன், லடாக் பகுதியில் இந்தியா கட்டியுள்ள 12 பாலங்களுக்கு தாங்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக தெரிவித்தார்.

தொடர்ந்து, அமைதியினை சீர்குலைக்கும் வகையில், இந்தியா நடந்து கொள்கின்றது எனவும், படைகளை வாபஸ் வாங்குவதற்கும், அமைதியினை கொண்டுவருவதற்கும் இந்தியாவின் இம்மாதிரியான செல்கள் தடையாக இருப்பதாகவும் தெரிவித்தார். இதற்கு இந்தியாவின் தரப்பில் கடுமையான பதிலடி வழங்கப்பட்டு உள்ளது.

இது குறித்து பேசிய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்ஸவா, இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடும் உரிமை, சீனாவிற்குக் கிடையாது. எங்களுடைய நிலைப்பாட்டில் நாங்கள் மிகவும் உறுதியாக இருக்கின்றோம். லடாக் மற்றும் ஜம்மூ காஷ்மீர் பகுதிகள் அனைத்தும், இந்தியாவின் ஒருங்கிணைந்தப் பகுதிகள் ஆகும். அன்றும், இன்றும், என்றும் அவை எங்களுடனே இருக்கும். இதுவே அருணாச்சலப் பிரதேசத்தின் விவகாரத்திலும் எங்கள் முடிவாகும்.

இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில், பிற நாடுகள் கருத்துச் சொல்லாமல் இருக்கும் என நம்புகின்றது எனத் தெரிவித்து உள்ளார். மேலும், சீனா தற்பொழுது வரை தன்னுடையப் படைகளை திரும்பப் பெறாமல் உள்ளது எனவும் தெரிவித்து உள்ளார்.

HOT NEWS