எல்லைக்கு பெரும் படையினை அனுப்பும் இந்தியா! தயாராகும் இராணுவம்!

05 August 2020 அரசியல்
indiansoldiers.jpg

தற்பொழுது சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையில், பதற்றம் நிலவி வருகின்ற நிலையில், லடாக் மற்றும் லே பகுதிகளுக்கு 17,000க்கும் அதிகமான இராணுவ வீரர்களை, இந்திய இராணுவம் அனுப்பி வைத்துள்ளது.

கடந்த மாதம் நடைபெற்ற பேச்சுவார்த்தையினைத் தொடர்ந்து, இரு நாட்டு இராணுவமும் தங்களுடைய வீரர்களை எல்லையில் இருந்து பின் வாங்கிக் கொள்வதாக முடிவு செய்தன. இந்திய இராணுவம் சர்ச்சைக்குரியப் பகுதிகளில் இருந்து பின் வாங்கியது. ஆனால், பின் வாங்குவது போல் சென்றுப் பின்னர், தொடர்ந்து சீன இராணுவம் அங்கேயே இருந்து வருகின்றது.

சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றப் பகுதிகளில் அதன் இராணுவம் தொடர்ந்து, இராணுவக் கட்டமைப்புகளை ஏற்படுத்தி வருகின்றது. இதனால், சீனா தன்னுடைய உறுதி மொழியினை மீறியுள்ளதாக இந்தியா குற்றம் சாட்டியது. இருப்பினும், இதனைக் காதில் போட்டுக் கொள்ளாத சீனா, தொடர்ந்து தன்னுடையக் கட்டமைப்பினை உருவாக்கி வந்தது.

இதனால், அப்பகுதியில் சீனாவின் அச்சுறுத்தல் அதிகரிக்க ஆரம்பித்தது. இதனைத் தொடர்ந்து, அந்தப் பகுதிக்கு இந்திய இராணுவம் தன்னுடைய 17,000க்கும் அதிகமானத் துருப்புகளை அனுப்பியுள்ளது. கனரக வாகனங்கள், டாங்கிகள், விமானங்கள் எனப் பல வித இராணுவ துருப்புகளை அனுப்பியுள்ளதால், அங்கு மீண்டும் பதற்றம் அதிகரித்து உள்ளது.

HOT NEWS