களத்தில் இந்தியா! ஒரே நேரத்தில் பாகிஸ்தான் சீனா தாக்கினாலும் எதிர்கொள்ள தயார்!

12 December 2020 அரசியல்
indianflag.jpg

தொடர்ந்து அச்சுறுத்தலாக இருக்கும் சீனா மற்றும் பாகிஸ்தானை சமாளிக்க, இரட்டைப் படையினை உருவாக்கும் முயற்சியில் இந்திய இராணுவம் ஈடுபட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில், கடந்த மே மாதம் முதல் லடாக் மற்றும் லே எல்லைப் பகுதிகளில் பதற்றமானது நீடித்து வருகின்றது. இரு நாடுகளுக்கு இடையில் போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதனால், இரு நாட்டு இராணுவமும், தன்னுடையத் துருப்புக்களை லடாக் பகுதியில் குவித்த வண்ணம் உள்ளன. இந்த சூழ்நிலையில், பாகிஸ்தானும் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வருகின்றது.

தொடர்ந்து, எல்லைப் பகுதிகளில் அத்துமீறித் துப்பாக்கிச்சூடு நடத்துவது, தீவிரவாதிகளை இந்தியாவிற்குள் அனுப்புவது எனப் பல சதிவேலைகளில் ஈடுபட்டு வருகின்றது. இதனை இந்திய இராணுவமும் எவ்விதப் பிரச்சனையும் இன்றி, லாவகமாக சமாளித்து வருகின்றது. இந்த சூழ்நிலையில், இரண்டு நாடுகளும் ஒரே நேரத்தில் இந்தியாவினைத் தாக்கினால் என்ன ஆகும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

அதற்குப் பதிலளிக்கும் விதமாக தற்பொழுது இந்திய இராணுவமானது, இரண்டுப் படைப் பிரிவுகளை உருவாக்க உள்ளது. இரண்டிற்கும் தனித்தனி தளபதிகள் நியமிக்கப்பட உள்ளனர். அவர்களில் ஒருவரின் கீழ் உள்ளப் படையானது பாகிஸ்தானையும், மற்றொருவரின் கீழ் உள்ள படையானது சீனாவையும் கவனிக்கும் விதத்தில் புதிய திட்டமானது உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தினை தற்பொழுது மத்திய அரசிடம் இந்திய இராணுவம் வழங்கியுள்ளதாகவும், இதற்கு விரைவில் அனுமதி கிடைக்கும் எனவும் கூறப்படுகின்றது.

BREAKING

சக்ரா திரைவிமர்சனம்!
மேற்கு வங்கத் தேர்தல் கணிப்பு! திரிணாமுல் VS பாஜக? யாருக்கு வெற்றி?
விவசாயிகளை தடுக்கு முள் வேலி! காண்க்ரீட் தடுப்புகள்! இரும்பு பேரிகேடுகள்!
சித்ரா தூக்கிட்டு தான் தற்கொலை செய்து கொண்டார்! நிபுணர் குழு அறிக்கை!
லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன்! படு திரில்லராக உருவாக உள்ளதாக படக்குழு அறிவிப்பு!
ரேஸ் காட்சிக்காக வெளிநாடு சென்றுள்ள வலிமை குழு! உற்சாகத்தில் ரசிகர்கள்!

HOT NEWS