ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை! இந்தியா புதிய சாதனை! மோடி வாழ்த்து!

08 September 2020 அரசியல்
spacexlaunch.jpg

ஒலியினை விட வேகமாகப் பயணிக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனையினை, இந்திய அரசு வெற்றிகரமாக முடித்து உள்ளது.

ஒடிசா மாநிலம் பாலசோர் வீலர் தீவிலுள்ள ஆய்வு மையத்தில், இந்தியாவின் டிஆர்டிஓ பெரிய சோதனை ஒன்றினை நடத்தியுள்ளது. அக்ணி ஏவுகணையைச் செலுத்துவதற்குப் பயன்படும் பூஸ்டர் மூலம், ஏவுகணையானது செலுத்தப்பட்டது. காலை 11.03 மணிக்கு இந்த ஏவுகணையானது சோதிக்கப்பட்டது. தரையில் இருந்து 30 கிலோ மீட்டருக்கு, அந்த பூஸ்டர் மூலம், வான் நோக்கிப் பயணித்த அந்த ஏவுகணையானது, பின்னர் தனியாகப் பறக்க ஆரம்பித்தது.

இது மாபெரும் வெற்றியாக இந்தியா கூறியுள்ளது. இது போன்ற அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளிடம் மட்டுமே இந்தத் தொழில்நுட்பம் உள்ளது. இந்த தொழில்நுட்பமானது, வருகின்ற ஐந்து ஆண்டுகளுக்குள் பெரிய அளவில் மாற்றம் செய்யப்படும். அதன் பின்னர், வினாடிக்கு ஆறு கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்கும் ஆற்றல் உடையதாக, இது மாற்றமடைய உள்ளது.

இந்த ஏவுகணையானது, ஒலியினை விட ஆறு மடங்கு வேகத்தில் பயணிக்கும் திறன் படைத்ததாக உருவாகி உள்ளது. இந்த ஏவுகணையினை நாம் தயாரித்து விட்டால், கட்டாயம் எதிரிகளை எளிதாக தாக்க முடியும். இந்த ஏவுகணையினை, யாராலும் அவ்வளவு எளிதில் ட்ராக் செய்ய முடியாது. இந்த ஏவுகணையானது அவ்வளவு வேகமானது, அதுமட்டுமல்ல இதன் தாக்கும் துல்லியமான ஒன்றாகும்.

HOT NEWS