மருந்து, உணவுப் பொருட்கள் கையிருப்பில் உள்ளது! கவலை வேண்டாம்! அமித் ஷா!

15 April 2020 அரசியல்
amitshahspeech12.jpg

இந்தியாவில் ஊரடங்கு உத்தரவானது அமலில் உள்ள நிலையில், மருந்துப் பொருட்களும், உணவுப் பொருட்களும் தேவையான அளவு இருப்பதாக, அமித் ஷா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் வருகின்ற மே-3ம் தேதி வரை, ஊரடங்கு உத்தரவானது, அமல்படுத்தப்பட்டு உள்ளது. வெளியில் யார் நடமாடலாம், விதிவிலக்குகள் மற்றும் விதிகள் பற்றி, மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குப் பற்றி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், இந்தியாவில் போதுமான அளவிற்கு, மருந்துப் பொருட்களும், உணவுப் பொருட்களும் கையிருப்பில் உள்ளதாக தெரிவித்தார். இது குறித்து யாரும் கவலைப்படத் தேவையில்லை எனவும் அவர் தெரிவித்தார். பணக்கார மக்கள் தாமாத முன்வந்து, ஏழை எளிய மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டு உள்ளார்.

HOT NEWS