ஐநாவின் நிரந்தரமற்ற உறுப்பினராக இந்தியா போட்டியின்றி தேர்வு! மோடி நன்றி!

18 June 2020 அரசியல்
unscindia.jpg Pic Credit:-twitter.com/UN_PGA

ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலில், நிரந்தரமற்ற உறுப்பினராக இந்தியா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இதற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலில் இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளனர். இந்நிலையில், இந்த ஆண்டு 5 நிரந்தரமற்ற உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் பணியானது நடைபெற்றது. இரண்டு ஆண்டுகளுக்கு உறுப்பினராக தேர்வு செய்யப்படுவது வழக்கமான ஒன்று.

இந்த ஆண்டு ஆசியா மற்றும் பசிபிக் சார்பில் இந்தியா போட்டியிட்டது. அதற்கு யாரும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. மேலும், மெக்சிகோ, அயர்லாந்து, நார்வே உள்ளிட்ட நாடுகளும் நிரந்தரமற்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். வருகின்ற ஜனவரி 1ம் தேதி அன்று, இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பு நாடுகள், பதவி ஏற்க உள்ளன.

HOT NEWS