இஸ்ரேலிடம் கில்லர் ட்ரோன்களை வாங்கும் இந்தியா! கலக்கத்தில் சீனா!

10 August 2020 அரசியல்
drone.jpg

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில், தொடர்ந்து மூன்று மாதங்களுக்கும் மேலாக, லடாக் மற்றும் லே பகுதியில் பதற்றம் நிலவி வருகின்றது. இதனால், இரு நாட்டு இராணுவமும் தங்களுடைய இராணுவத் துருப்புக்களை லடாக் பகுதியில் குவித்து வருகின்றன.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், இந்திய இராணுவம் புதிய ஆயுதங்களை வாங்குவதில், அதிக ஆர்வம் காட்டி வருகின்றது. இந்தியா தற்பொழுது அவசர அவசரமாக, ரபேல் போர் விமானங்களை வாங்கியுள்ளது. அது மட்டுமின்றி, பலவித குண்டுகள், ஆயுதங்கள், மேம்படுத்தப்பட்ட துப்பாக்கிகள் எனப் பலவற்றினை வாங்கி வருகின்றது. இதனால், சீனா தற்பொழுது பீதியில் உள்ளது. அது மட்டுமின்றி, சீனாவின் மீது வளர்ந்த நாடுகள் அனைத்தும் மிகக் கோபமாக உள்ளன.

இந்த சூழ்நிலையில், இந்திய இராணுவம் தற்பொழுது இஸ்ரேல் நாட்டிடம் இருந்து, ஹெரான் ரக கில்லர் ட்ரோன்களை வாங்க தற்பொழுது முடிவு செய்துள்ளது. இதற்கான ஒப்பந்தங்களும் கையெழுத்தாகி உள்ளன. மொத்தம் 3,500 கோடி மதிப்பில் 90 ட்ரோன்களை வாங்க முடிவாகி உள்ளது. இந்த ஒப்பந்தத்தின் படி, இந்திய இராணுவத்திற்கு விரைவில் இந்த ட்ரோன்கள் வந்து சேரும்.

இந்த ட்ரோன்கள் மற்ற ட்ரோன்களைப் போல இல்லாமல், எதிரிகளின் இலக்குகளைக் குறி வைத்துத் தாக்கும் வலிமைப் பொருந்தியது. அதிவேகமாகப் பறக்கும் திறன் கொண்டது. லேசர் ஒளியினைப் பின்பற்றிப் பறக்கும் அதிநவீன தொழில்நுட்பத்தினை உள்ளடக்கியது. இந்த ட்ரோன்களைப் பயன்படுத்தி, எதிரி நாட்டு டாங்கர்களைக் கூட எளிதாக தாக்க இயலும் என்றுக் கூறப்படுகின்றது.

HOT NEWS