டிராவில் முடிந்த 3வது டெஸ்ட்! விஹாரியை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

11 January 2021 விளையாட்டு
ausvsind3rdtest.jpg

இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதிய 3வது டெஸ்ட் போட்டியானது, டிராவில் முடிவடைந்தது.

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இந்திய அணி, தற்பொழுது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றது. ஜனவரி 7ம் தேதி ஆரம்பித்த 3வது போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கினைத் தேர்வு செய்தது. அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி தன்னுடைய முதல் இன்னிங்சில் 105.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 338 ரன்களைக் குவித்தது. அந்த அணியின் ஸ்மித் 131 ரன்களும், லாபுஸ்சங்னே 91 ரன்களும், புக்கோவ்ஸ்கி 62 ரன்களும் எடுத்தனர். இந்தியாவின் சார்பில் ஜடேஜா 4 விக்கெட்டுகளும், சைனி மற்றும் பும்ரா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

அதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி, 100.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 244 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணியின் சார்பில், கில் மற்றும் புஜாரா ஆகியோர் தலா 50 ரன்களையும், பண்ட் 36 ரன்களையும் அடித்தனர். ஆஸ்திரேலியாவின் சார்பில், கும்மின்ஸ் 4 விக்கெட்டுகளையும், ஹசல்வுட் 2 விக்கெட்டுகளையும், ஸ்டார்க் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். ஆஸ்திரேலிய அணியானது, 2வது இன்னிங்சில் 87 ஓவரில், 6 விக்கெட்டுகளை இழந்து 312 ரன்களை எடுத்தது. இந்தியாவின் சார்பில் அஸ்வின் மற்றும் சைனி ஆகியோர் தலா 2 விக்கெட்டும், சிராஜ் மற்றும் பும்ரா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இரண்டாவது இன்னிங்சினை ஆரம்பித்த 131 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து, 334 ரன்களை மட்டுமே இந்திய அணி அடித்திருந்தது. பண்ட் 97 ரன்களும், புஜாரா 77 ரன்களும், சர்மா 52 ரன்களையும் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணியின் சார்பில், லைன் மற்றும் ஹசல்வுட் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும், கம்மின்ஸ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். ஹனுமந்த் விஹாரி 161 பந்துகளில் 23 ரன்களை மட்டுமே எடுத்ததால், அவரை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

HOT NEWS