சீனா மீது கோபம் மேலும் மேலும் அதிகரிக்கின்றது! ட்ரம்ப் கருத்து!

01 July 2020 அரசியல்
trump2.jpg

சீனாவின் மீதுள்ள கோபமானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருப்பதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுக்க கொரோனா வைரஸானது, நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. இதனால், தற்பொழுது வரை ஒரு கோடியே பத்து லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். நான்கரை லட்சத்திற்கும் அதிகமானோர் மரணமடைந்து உள்ளனர். இந்த சூழ்நிலையில், இந்த வைரஸால் அமெரிக்காவில் பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அங்கு நாளுக்கு நாள், நிலமையானது மோசமாகிக் கொண்டே உள்ளது. தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பும் ஏனையப் பிற அதிகாரிகளும் இவைகளுக்கு சீனா தான் காரணம் என்றுக் கூறி வருகின்றனர். இருப்பினும், அவர்களின் பேச்சினை சீனாக் கேட்பதாக இல்லை. இந்த சூழ்நிலையில், தற்பொழுது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சீனா குறித்து தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் புதிய கருத்து ஒன்றினை தெரிவித்துள்ளார்.

அதில், அவசர சூழலைப் பார்க்கும் பொழுது, உலக நாடுகளுக்கும், அமெரிக்காவிற்கும் பெரும் சேதம் ஏற்பட்டு உள்ளது. எனக்கு கோபமானது மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டே உள்ளது. மக்கள் என்னைப் பார்த்தால் தெரியும். நான் மக்களிடமும் இதையேப் பார்க்கின்றேன் என்றுக் கூறியுள்ளார்.

HOT NEWS