தொங்கும் மார்பகங்களை சரி செய்வது எப்படி? இயற்கை வைத்தியம்!

09 January 2020 உடல்நலம்
breastsagging.jpg

பெண்களுக்கு உடல் சார்ந்த கவலைகள், ஆண்களை விட அதிகமாகவே இருக்கும். ஆனால், பெண்களுக்கு மனம் சார்ந்த கவலைகள் என்பது மிகக் குறைவாகவே ஏற்படும். அதிலும், அழகு சம்பந்தமாக பெண்களுக்கு இருக்கும் கவலைகள் இருக்கின்றதே! யப்ப்பாஆஆ!

அளவிட முடியாத அளவிற்கு அவர்கள், தங்களுடைய அழகினை நினைத்து கவலைப்படுவர். அவர்களுடைய அழகினை எப்படி சீர்படுத்துவது, எவ்வாறு மெயின்டெய்ன் செய்வது எனப் பேசாத பெண்களேக் கிடையாது. இருபது வயது குமரி முதல் அறுபது வயது பெரியவர் வரை, அனைவருக்கும் இந்த அழகுப் பிரச்சனை உள்ளது.

பெண்களில் பெரும்பாலானோருக்கு, இயற்கையாகவே தொங்கும் மார்பகங்கள் அமைந்துவிடுகின்றன. குடும்ப ஜீன், போதிய சத்திலில்லாத உணவு மற்றும் கவலையின் காரணமாக பெண்களுடைய மார்பகங்கள் தொங்கி விடுகின்றன. சரி இது இயற்கையாகவே அமைந்தது என்றால், ஒரு சிலருக்கு தொங்காமல், விறைப்பாக இருக்கும் மார்பகங்களும், வயதாக ஆரம்பித்ததும், தளர்வடைய ஆரம்பித்து தொங்கிவிடும்.

இதற்குப் பலக் காரணங்கள் உள்ளன. அவைகளில், மார்பகங்கள் பெரிதாக இருப்பதும் ஒரு காரணம். பெரிய அளவில் மார்பகங்களை உடையவர்களுக்கு, நாளடைவில் அது தளர்ந்து தொங்க ஆரம்பித்து விடும். இவைகளைக் கீழ் காணும் செயல்களை, தொடர்ச்சியாக செய்யும் பொழுது, மார்பகங்கள் தளர்வடைவது நீங்கி, புத்துணர்ச்சியுடன் மீண்டும் விறைப்புத் தன்மையை அடையும்.

மசாஜ்

மசாஜ் என்றதும், வேறு இடங்களுக்குச் சென்று, பணம் செலவழிக்க வேண்டுமோ என, கவலைப் பட வேண்டாம். நீங்களே உங்கள் வீட்டில் செய்யலாம். அதிகபட்சம் பத்து ரூபாய்க்கு மேல் செலவாகாது. ஐஸ் கட்டியினை வாங்கிக் கொள்ளுங்கள். அதனை, மேலாடை மற்றும் மார்பகத்தினை மறைக்கும் ஆடைகளை கழற்றிவிட்டு, உங்கள் மார்பகத்தின் மீது வைத்து தேயுங்கள். மெதுவாகம், மென்மையாகவும் செய்யும் பொழுது, மார்பகத்தில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். தொடர்ந்து இதனை செய்ய மார்பகத்தில் உள்ள திசுக்கள் விரிவடையும்.

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில், மிக மலிவான விலையில் கிடைக்கின்றது. அதனை எடுத்து, மார்பகத்தில் மென்மையாக, வட்ட வடிவத்தில் தேய்க்க வேண்டும். கீழ் நோக்கி செய்யாமல் மேல் நோக்கி மசாஜ் செய்வது போல் எண்ணெய் தேய்க வேண்டும். அவ்வாறு செய்தால், மார்பகத்தின் தசைகள் வலுவடையும். அத்துடன், தொங்கிய நிலையில் இருந்த மார்பகம், கொஞ்சம் கொஞ்சமாக சிக்கென ஆகும்.

BREAKING

சக்ரா திரைவிமர்சனம்!
மேற்கு வங்கத் தேர்தல் கணிப்பு! திரிணாமுல் VS பாஜக? யாருக்கு வெற்றி?
விவசாயிகளை தடுக்கு முள் வேலி! காண்க்ரீட் தடுப்புகள்! இரும்பு பேரிகேடுகள்!
சித்ரா தூக்கிட்டு தான் தற்கொலை செய்து கொண்டார்! நிபுணர் குழு அறிக்கை!
லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன்! படு திரில்லராக உருவாக உள்ளதாக படக்குழு அறிவிப்பு!
ரேஸ் காட்சிக்காக வெளிநாடு சென்றுள்ள வலிமை குழு! உற்சாகத்தில் ரசிகர்கள்!

உணவு

பெண் தன்மையை அதிகரிக்கும் உணவுகளை, அதிகம் எடுத்துக் கொள்வது நல்லது. சோயா பீன்ஸ், முட்டைக் கோஸ், முட்டை, வெள்ளரிக்காய் உள்ளிட்டவைகளை உணவில் சேர்த்துக் கொண்டால், நல்ல விளைவுகளை நீங்கள் விரைவில் அடையலாம்.

கற்றாழை பசை

உலகில், அதிக அழகிகளால் பயன்படுத்தப்படும் இயற்கையான பொருள் என்றால், அது கற்றாழைப் பசை தான். கற்றாழையை எடுத்து, அதன் தோலினை நீக்கி, உள்ளே உள்ள சோறு என்று அழைக்கப்படும் பசையை எடுத்துக் கொள்ளவும். அதனை, மை போல மிக்சியில் அரைத்து குளிர வைக்கவும். பின்னர், அதிகாலை அல்லது சூரிய அஸ்தமனமான பிறகு, உங்கள் மார்பகத்தின் மீது, தடவ வேண்டும். அதனை தொடர்ந்து செய்வதன் மூலம், உங்கள் மார்பகத்தில் உள்ள தேவையற்ற நீர் வெளியேறிவிடும். பின்னர், உங்களுடைய மார்பகம் வலுவடையும். அதனைத் தொடர்ந்து, உங்களுடைய மார்பகம் பெரிதாகும்.

யோகா

பெரும்பாலான இந்தியப் பெண்கள், உடற்பயிற்சி செய்வதில்லை. உடற்பயிற்சி போல, உடனடிப் பலன் கொடுக்கக் கூடிய விஷயம் எதுவும் இல்லை. ஆனால், சோம்பேறித்தனம், மற்றவர்கள் நம்மைப் பற்றி என்னக் கூறுவார்கள் என்ற எண்ணத்தால் நாம் அதனைச் செய்வதில்லை.

ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. மாறாக, வீட்டிலேயே யோகா செய்யலாம். முதலில் மனதிற்கு ஒரு மாதிரி தான் இருக்கும். ஆனால், அதனுடையப் பலன்களை நீங்கள் அடைகின்றீர்கள் என தெரிந்ததும், தொடர்ந்து நீங்களே செய்ய ஆரம்பித்துவிடுவீர்கள். யோகா செய்வதன் மூலம், உடலில் உள்ள தசைகள் வலுவடையும். இதனால், மார்பகம் தொங்காமல் இருக்கும். மேலும், தோல் மிருதுவாகும்.

முட்டை வெள்ளை கரு

முட்டையின் வெள்ளை கரு, அதிக புரதம் நிறைந்தது. குளிப்பதற்கு முன், முட்டையின் வெள்ளைக் கருவினை எடுத்து, நன்றாக கலக்கி, அதனை மார்பகத்தில் வட்ட வடிவில், மேல்நோக்கி மசாஜ் செய்ய வேண்டும். பின்னர், ஒரு அரைமணி நேரம் எதுவும் செய்யாமல் அமைதியாக இருக்க வேண்டும். அப்பொழுது, மார்பகத்தினை விர்ரென்று பிடித்து உடல் இழுப்பது போல இருக்கும். பின்னர், குளிர்ந்த நீரில் குளிக்கலாம். அவ்வாறு தொடர்ந்து செய்வதன் மூலம், மார்பகம் இறுகி பெரிதாகும்.

செய்யக் கூடாதவை

தவறான அளவுள்ள ப்ராக்களை அணியக் கூடாது.


உறங்கும் பொழுது, உள்ளாடைகளை அணியக் கூடாது.


புரத உணவுள்ள உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.


மார்பகத்தினை கீழ் நோக்கி இழுக்கக் கூடாது.

HOT NEWS