2023ல் என்னுடைய அரசியல் என்னவென்பது தெரியும்! குமாராசாமி ஆவேச பேச்சு!

22 December 2020 அரசியல்
kumaraswamyhd.jpg

2023ம் ஆண்டு, என்னுடைய அரசியல் எப்படிப்பட்டது என, கர்நாடகாவில் தெரியும் என, குமாராசாமி தெரிவித்து உள்ளார்.

கடந்த வாரம், கர்நாடகா முதல்வர் எடியூரப்பா ஜேடி(எஸ்) கட்சியானது பாஜகவில் இணைக்கப்பாடது என, தன்னுடையக் கட்சியினருக்குத் தெரிவித்தார். மேலும் குமாரசாமி பாஜகவில் தன்னுடையக் கட்சியினை இணைக்க விரும்புவதாக தெரிவிக்கப்பட்டக் கருத்தினைத் தொடர்ந்து இவ்வாறு பேசுவதாகவும் கூறினார். இந்த செயலுக்கு, தற்பொழுது குமாரசாமி தன்னுடையப் பதிலைத் தெரிவித்து உள்ளார்.

அவர் பேசுகையில், வருகின்ற 2023ம் ஆண்டு என்னுடைய அரசியல் எப்படிப்பட்டது என்பதுப் பற்றி, தெரிய வரும். நான் இருக்கின்ற ஜேடி(எஸ்) கட்சியானது ஒரு போதும் அழிக்கப்படவோ அல்லது வேறு கட்சிகளுடன் இணைக்கப்படவோ செய்யாது. இந்தக் கட்சியானது, விவசாயிகளால் உருவாக்கப்பட்டது. அதுவும் பிரதமர் தேவ கவுடா ஆட்சியில் நடைபெற்றது என அவர் தெரிவித்து உள்ளார்.

HOT NEWS