எம்எல்ஏக்களுக்கு பாஜக பணம்! காங்கிரஸ் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ! பாஜக மறுப்பு!

04 November 2020 அரசியல்
rahulgujarat.jpg

குஜராத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு பாஜக பணம் தந்தாக, காங்கிரஸ் தற்பொழுது அதிரடி வீடியோ ஒன்றினை வெளியிட்டு உள்ளது.

குஜராத் மாநிலத்தில் 8 தொகுதிகளில் நேற்று சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்தத் தொகுதியினைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் திடீரென்று, தங்களுடையப் பதவியினை ராஜினாமா செய்ததால், அந்தத் தொகுதியில் இந்தத் தேர்தலானது நடைபெற்றது. தங்கள் பதவியினை ராஜினாமா செய்த காங்கிரஸ் எம்எல்ஏக்களில் 5 பேர், தற்பொழுது பாஜகவின் சார்பில் போட்டியிட்டு உள்ளனர்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் சார்பில் குஜராத்தின் அகமதாபாத் நகரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் பொழுது, பரபரப்பான வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது. அதில், பாஜகவினைச் சேர்ந்தவர்கள், காங்கிரஸ் கட்சியின் சோம்பாய் படேல் என்ற சட்டமன்ற உறுப்பினருடன் உரையாடுகின்றனர். அதில், அவருக்கு 10 கோடி கொடுத்துள்ளதாக அந்த பாஜக உறுப்பினர் கூறியுள்ளார். இது தற்பொழுது கடும் விவாதத்தினை ஏற்படுத்தி உள்ளது.

HOT NEWS