ஜியோவில் முதலீடு செய்யும் ஜெனரல் அட்லாண்டிக்! குறைந்த கடன் சுமை!

19 May 2020 தொழில்நுட்பம்
jio.jpg

ஜியோ நிறுவனத்தில் பேஸ்புக் நிறுவனத்தினைத் தொடர்ந்து, தற்பொழுது அமெரிக்காவின் ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனம் முதலீடு செய்துள்ளது.

இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமாக இருக்கும் நிறுவனமே முகேஷ் அம்பானியின் ஜியோ. இந்த நிறுவனம், மிகக் குறுகியக் காலத்தில், இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனமாக, மாறியுள்ளது. இதனையடுத்து, இதில் பலரும் முதலீடு செய்ய முன் வந்துள்ளனர். பேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பெர்க், இதில் முதலீடு செய்வதாக அறிவித்தார்.

இந்நிலையில், அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றான ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனம், ஜியோவின் 1.3% பங்குகளை சுமார் 5.16 டிரில்லயன் ரூபாய்க்கு, அதாவது 68 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்க முன் வந்துள்ளது. இதற்கான ஒப்பந்தங்கள் முடிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளன. கடுமையான கடன் சுமையால் திண்டாடி வந்த ஜியோ நிறுவனத்திற்கு, தற்பொழுது பெரும் ஆறுதலாக இந்த முதலீடு அமைந்துள்ளது.

இந்த முதலீட்டின் காரணமாக, ஜியோ நிறுவனத்தின் பெரும்பாலான கடன்கள் அடைக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே சவுதி நிறுவனம் ஒன்று, ஜியோவில் முதலீடு செய்துள்ளது. அதுமட்டுமின்றி, சில்வர் லேக் மற்றும் விஸ்டா ஈக்குயூட்டி பார்ட்னர்ஸ் நிறுவனங்களும் ஜியோவில் முதலீடு செய்துள்ளன.

இது குறித்துப் பேசியுள்ள ஜியோ நிறுவனத்தின் இயக்குநர் ஆகாஷ் அம்பானி பேசுகையில், ஜெனரல் அட்லாண்டிக் போன்ற நிறுவனங்கள் ஜியோவில் முதலீடு செய்துள்ளது நம் நாட்டிற்கும், நமக்கும் பெருமை அளிக்கும் விஷயமாகும் என்றுக் கூறியுள்ளார். இவர், முகேஷ் அம்பானியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு தொடர்ந்து பல நிறுவனங்கள் ஜியோ நிறுவனத்தில் முதலீடு செய்து வருவதால், ஜியோவின் அடுத்த தயாரிப்பான ஜியோ மார்ட் நிறுவனத்திற்கு மிக உதவியாக இருக்கும் என்றுக் கூறப்படுகின்றது.

HOT NEWS